குருகிராம்: தென்கொரிய மின்னணு மற்றும் தகவல் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்துடன் கைகோர்த்து, அதன்மூலம் தனது தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் அங்கமாக, சாம்சங் - ஃபேஸ்புக் இணைந்து, 800 சில்லறை விற்பனையாளர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளது. மேலும், பலருக்கு பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாத்தியப்படும் வகையில், சாம்சங் சாதனங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசெஞ்சர் ஆகிய செயலிகள் மூலம் பதிவுசெய்து, அருகில் உள்ள கடைக்காரர்களிடமிருந்து டெலிவரி பெற்றுக்கொள்ள முடியும்.
தனியுரிமை தகவல்களை திருடுவதாக ஜூம் செயலி மீது வழக்கு!
கரோனா நோய்க்கிருமியின் பரவல் காரணமாக, அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இணைய வழியைத் தேடிவருகிறது. தற்போது சாம்சங் இந்தியாவின் இம்முடிவு வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதில் சாம்சங் நிறுவனப் பொருட்களை கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப் போவதில்லை.