சீனாவின் ஆளில்லா விண்கலமான 'சாங் இ -5' நிலவிலிருந்து 2 கிலோகிராம் பாறைகளைச் சேகரித்து பூமியை நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 44 ஆண்டுகளுக்குப் பின் நிலவு மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டுவருகிறது. முன்னதாக அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி வீரர்கள் நிலவு மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பினர்.
நவம்பர் 23ஆம் தேதி 4.30 மணியளவில் ஹைனானில் உள்ள வென்சாங் ஏவுதள மையத்திலிருந்து ஏவப்பட்டு, நேற்று (டிச. 03) இரவு 11 மணி அளவில் நிலவின் மேற்பரப்பை அடைந்தது. அதையடுத்து அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில், 19 மணி நேரம் தங்கியிருந்து, மாதிரிகள் சேகரிப்பது, நிலப்பரப்பை புகைப்படம் எடுப்பது, ரேடார் மூலம் பகுப்பாய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது.
அதைத்தொடர்ந்து 2 கிலோகிராம் பாறை மாதிரிகளுடன், பூமியை நோக்கிப் புறப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களில் பூமியை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீனாவின் ஆளில்லா விண்கலம்!