பீய்ஜிங் (சீனா): சீனா தனது அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருக்கவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதன் வாயிலாகத் திபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இன்று திறக்கப்பட்ட சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான சிசுவான் பகுதியில் இருந்து திபெத் நாட்டை இணைக்கும் லாசா - யிங்சி வரையிலான 435.5 கிலோமீட்டர் தொலைவிலான புல்லட் ரயில் வழித்தடம் தான் மிகப்பெரிய புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு பகுதியாகும்.
இந்திய எல்லை பகுதியான அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்திற்கும், திபெத் நாட்டின் எல்லைப் பகுதி தான் யிங்சி பகுதி. சீனா தொடர்ந்து திபெத் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையிலும், இந்தியா - சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்னை இருக்கும் காரணத்தால் இந்த புல்லட் ரயில் திட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி: மலிவான விலையில் அசரடிக்கும் அம்சங்கள்!
நவம்பர் மாதம் சீன பிரதமர் ஜி ஜின்பிங் சீனாவின் சிசுவான் பகுதியில் இருந்து திபெத் நாட்டை இணைக்கும் புதிய ரயில் திட்டம் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் எல்லை பாதுகாப்பை வலிமைப்படுத்தும் எனக் கூறினார்.
சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தலைநகரான செங்குடு பகுதியில் இருந்து தொடங்கும் இந்த ரயில் திட்டம் யானன் வழியாக காம்டோ மூலம் திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது. இதன் மூலம் செங்குடு முதல் லாசா வரையிலான 48 மணிநேர பயணத்தை 13 மணிநேரமாகக் குறைக்கவுள்ளது.