தைபே (தைவான்): வேறு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட்போன்களை தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்த ஃபாக்ஸ்கான், தற்போது மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்க முடிவெடுத்துள்ளது.
சீனா, வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சந்தைகளில் இருக்கும் கார் நிறுவனங்களுக்கு மின்சார கார்கள், பேருந்துகளை நிறுவனம் தயாரித்துக் கொடுக்கவுள்ளது. இந்த தகவலை ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஒரு தடவை சார்ஜ் செய்தால் 750 கிலோ மீட்டர் வரை செல்லும், 'மாடல் E செடான்' கார்களை 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் 'மாடல் டி' எனும் பேருந்தை நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பேருந்து 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் முடக்கத்தால் டெலிகிராமுக்கு தாவிய 7 கோடி பயனர்கள்