ETV Bharat / science-and-technology

5,000 முன்பதிவுகளைக் கடந்த நிசான் மேக்னைட் எஸ்யூவி

author img

By

Published : Dec 7, 2020, 8:14 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி கார்களின் முதன்மை ரகங்களான எக்ஸ்.வி, எக்ஸ்.வி பிரீமியம் கார்கள் 60 விழுக்காடு அளவு முன்பதிவைப் பெற்றுள்ளதாகவும், சிவிடி தானியங்கி ரகம் 30 விழுக்காட்டுக்கு மேல் பதிவைப் பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

compact SUV Magnite, Nissan  Magnite, நிசான் மேக்னைட் எஸ்யூவி, நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை, Nissan Magnite xuv
நிசான் மேக்னைட் எஸ்யூவி

மும்பை: நிசான் மேக்னைட் எஸ்யூவி கார்கள் 5,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 2ஆம் தேதி, ரூ.4.99 லட்சம் தொடக்க சலுகை விலையாக வெளியிடப்பட்ட நிசான் மேக்னைட் எஸ்யூவி காரைக் குறித்து முகவர்களிடம் 50,000 பேருக்கு மேல் தகவல் கேட்டுள்ளனர். இதிலிருந்து 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேக்னைட் எஸ்யூவி கார்களின் முதன்மை ரகங்களான எக்ஸ்.வி, எக்ஸ்.வி பிரீமியம் கார்கள் 60 விழுக்காடு அளவு முன்பதிவைப் பெற்றுள்ளதாகவும், சிவிடி தானியங்கி ரகம் 30 விழுக்காட்டுக்கு மேல் பதிவைப் பெற்றுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் சிறப்புச் சலுகை விலை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.9.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை டிசம்பர் 31 வரை மட்டுமே இருக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.