ஆப்பிள் நிறுவனத்தின் 'ஏர்பாட்ஸ்' இயர்பட்ஸ்களுக்கு போட்டியாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்டாகி வருகின்றன. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்க்கு போட்டியாக வயர்லெஸ் இயர்பட்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றன.
சில நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தனது நிறுவனத்தின் சார்பில் இயர்பட்ஸ்களை மே மாதம் 9ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் 'சர்ஃபேஸ் பட்ஸ்' என அழைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கூகுள் நமக்களித்த சிறப்பான உதவியாளர் ‘கூகுள் அசிஸ்டெண்ட்’
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படும் இவை நியூ சர்பேஸ் இயர்பட்ஸ் (New Suface Earbuds) என்ற பெயரில் வெளியாகவுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே ஆடியோ சாதனங்கள் சந்தையில் சர்ஃபேஸ் ஹெட்போன்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரதான உதவியாளரான ‘கார்டணா’ வசதி நிச்சயம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வசதியை கொண்டு மொபைலில் தகவல்களை மிக எளிமையாக வாசிக்க முடியும்.
ஒப்போ எ12: நடுத்தர பயனாளர்களுக்கான ஸ்மார்ட்போன் அறிமுகம்!
சிரி, அலெக்சா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் இயர்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மைக்ரோசாஃப்ட் சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை எந்தளவு வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறப்பம்சங்கள்
- வயர்லெஸ் இயர்பட்ஸ் விண்டோஸ் 10 கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க முடியும். மேலும் இது எந்த தளத்துடனும், எந்த ப்ளூடூட் அம்சம்கொண்ட எந்த தகவல் சாதனங்களுடனும் வேலை செய்ய கூடியதாக இருக்கும்.
- அவை மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உடன் இணைந்து செயல்படும். மேலும் குரல் கட்டளையை உடனடியாகப் பெற்று நிறைவேற்றும்.
- நிகழ்நேரத்தில் 60க்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்க்கும் திறன்கொண்டது
- இரட்டை ஒலி வாங்கிகள் நேர்த்தியான, தெளிவான அழைப்புகளுக்காக
- ஆம்னிசோனிக் தொழில்நுட்ப ஒலிப்பெருக்கிகள்
- மின்னூக்க, தகவல்களை பரிமாற யூஎஸ்பி-சி உதவி
- 24 மணிநேர மின்கல சேமிப்புத் திறன்
இதன் விலை ஆப்பிள் ஏர்பாட்ஸுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தை மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Microsoft Surface Earbuds to release on May 6: Report