ஆப்பிள் நிறுவனம் தற்போது மூன்று ஆப்பிள் டிவி மாடல்களை மார்க்கெட்டில் விற்பனை செய்துவருகிறது. ஆப்பிள் டிவி 4K மாடல், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 870 ரூபாய் மற்றும் 15 ஆயிரத்து 419 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாடல், ஹோம் தியேட்டர்களை விரும்புவோர் மத்தியில் தலைசிறந்த மாடலாக விளங்குகிறது. இதில் உள்ள எக்ஸ்டெண்டட் டிஸ்ப்ளே ஐடென்டிபிகேஷன் டேட்டா (EDID)போன்ற அம்சம் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் மலிவு விலையில் புதிய ஆப்பிள் டிவியை கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிபுணர் என அறியப்படும் மிங் சி கியோ இந்த தகவலை தெரிவித்துள்ளார். போட்டி நிறுவனங்களின் சாதனங்களை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், புதிய ஆப்பிள் டிவி மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், இதுகுறித்து ஆப்பிள் சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:பைக்குகளின் ராஜா.. வெளிநாட்டவர்கள் வியக்கும் புதிய தொழில்நுட்பம்!