ETV Bharat / opinion

அமெரிக்கா வழியே இந்தியாவுக்குள் நுழையும் சீன நிறுவனங்கள் - சியோமி

பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசு தடை விதித்துள்ள பெரும்பாலான செயலிகள் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சீன நிறுவனங்கள் அமெரிக்கா வழியாக இந்திய சந்தையில் ஊடுருவ முயல்வது குறித்து ஈடிவி பாரத் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

Chinese tech giants are coming to India via the USA

author img

By

Published : Jul 2, 2020, 3:54 PM IST

டிக்டாக், பெய்டு, யூசி பிரவுசர் உள்ளிட்ட சீன நாட்டின் 59 செயலிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து டிராகன் உலகமானது, அமெரிக்கா வழியாக இந்திய சந்தைக்குள் நுழைய இருப்பதாக ஈடிவி பாரத் டெபுடி செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதி கூறுகிறார். தடை செய்யப்பட்ட பல மொபைல் செயலிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் முதலீடுகளின் உண்மையான முன்னெடுப்பாளர்களைக் கண்டறிவது சிரமமான ஒன்றாக இருக்கிறது.

புதுடெல்லி; பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இருக்கும் சீன இணையதள நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளில் ஈடுபட்டிருக்கும் உண்மையான முன்னெடுப்பாளர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது.

சில தொழில்நுட்ப பெருநிறுவனங்களில், குறிப்பாக ஜாக்மா மற்றும் டெண்சென்ட் ஆகியோரால் நிறுவப்பட்ட பெய்டு, அலிபாபா போன்றவை சீன நிறுவனங்கள் என்பது நன்றாக தெரிந்த விஷயம். இவைகள் பொதுவாக பெரிய மூன்று நிறுவனங்கள் அல்லது ‘சீனாவின் பாட்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இதர சில சீனாவின் தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் மொபைல் செயலிகள் அமெரிக்கா மற்றும் இதர பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த சீனா பிராண்ட்களாக அவை இல்லை.

உதாரணத்துக்கு தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் பட்டியலில் காணப்படும் பல மொபைல் செயலிகள் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

சீட்டா மொபைல் (ஸ்டாக் டிக்கர் சிஎம்சிஎம்) என்ற நிறுவனத்தின் சீட்டா மொபைல் பிரவுசர், செக்யூரிட்டி மாஸ்டர், க்ளீன் மாஸ்டர்(ஸ்மார்ட் போனில் இருக்கும் ஜங்க் கோப்புகளை அழிக்கக் கூடிய செயலி) உள்ளிட்ட செயலிகளில், அதன் உபயோகம் மற்றும் செயல்பாடுகள் ஆங்கிலம் அல்லது மேற்கத்திய பெயர்களைக் கொண்டிருக்கின்றன. இது சீனாவுடன் வெளிப்படையான தொடர்புகளில் இல்லை என்ற தோற்றத்தை தருகிறது.

‘த கேட்வே ஹவுஸ்’ என்ற வெளியுறவுக் கொள்கை சிந்தனை அமைப்பின் மும்பையைச் சேர்ந்த அமித்பந்தாரி என்பவர், “சீன நிறுவனங்கள்தான் என்ற சந்தேகத்தை தவிர்க்க அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுவது அந்த நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கிறது” என்றார்.

“தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்தவரை, முழுமையாக சீனாவில் இருந்து வெளிவந்தவை என அவைகள் மீது ஏதோ ஒரு சந்தேகம் இருக்கிறது. எனவே அந்த நிறுவனங்களின் டேட்டா பாதுகாப்பானது அல்ல என்று நீண்டகலமாக கிசுகிசுக்கப்படுகிறது” என ஈடிவி பாரத்திடம் அவர் கூறினார்.

சீட்டா மொபைல் நிறுவனத்துக்கு சீன கைப்பேசி தயாரிப்பாளர் எக்சோமியுடன் தொடர்பு இருக்கிறது என்றும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அது பெரும் பங்கைக் கொண்டுள்ளது என்பதும் சிலருக்குத் தெரியும்.

சியோமி, ரெட்மி போன்கள், எம்ஐ போன்கள், போகோ போன்கள் என்று மூன்று வெவ்வெறு பிராண்ட்களில் அவை மொபைல் போன்களை சந்தைப்படுத்துகிறது. எம்ஐ பே, எம்ஐ வீடியோ, எம்ஐ ஸ்டோர், எம்ஐ வெப் பிரவுசர்உள்ளிட்ட சொந்த பிராண்ட் பெயரைக் கொண்ட சொந்த மொபைல் பயன்பாடுகளை அதன் மொபைல் போன்களில் மூன்கூட்டியே பதிவேற்றம் செய்து விற்பனை செய்து வருகின்றன.

எனினும் சியோமி குறித்த குறைவான புரிதல் காரணமாக அதன் நிறுவனர் லீ ஜுன்ஸுக்கு சீன மொபைல் செயலிகளான கிளீன் மாஸ்டர், செக்யூரிட்டி மாஸ்டர், சேட்டெக் கேம்ஸ், சேட்டெக் கீ போர்டு, போட்டோ கிரிட் மற்றும் இதர செயலிகளுடன் தொடர்பிருப்பது இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய அரசால் தடை செய்யும் முன்பு வரை யாருக்கும் தெரியவில்லை. இவற்றை குறிப்பிடத்தக்க சீன செயலிகளாகவும் பலர் கருதவில்லை.

சீட்டா மொபைலின் தலைமை அலுவலகம் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ளது. ஆனால், கிங்சாஃப்ட் நெட் ஒர்க் மற்றும் கோநியூ இமேஜ் நிறுவனங்களின் இணைப்பால் 2010-ல் உருவான இது அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனமே பின்னர் சீட்டா மொபைல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கேட்வே ஹவுஸ் அறிக்கையை எழுதிய துணை எழுத்தாளர் அமித் பந்தாரி, “சீனாவின் உத்திப்பூர்வமான தொழில்நுட்ப ஆழம் இந்தியாவில் இருக்கிறது. மேற்கத்திய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து செயல்படுவது எளிதாக இருக்கிறது” என்று சொல்கிறார்.

“மேற்கத்திய நிறுவனங்கள், எளிதாக அணுகுகின்றன. சந்தேகம் குறைவாக இருக்கிறது.” என்று ஈடிவி பாரத்திடம் கூறுகிறார்.

கேட்வே ஹவுசில் தனி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டப்படி, “இந்திய பயனர்களால் 2018-ம் ஆண்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட செயலிகள் சீனாவின் இணைய நிறுவனங்களுடன் தொடர்புடையவை. இதர சர்வதேச தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் செயலிகளில் கேட்கும் அனுமதி கோரிக்கைகளை விடவும், அதிக அணுகுதலைக் கொண்ட பயனாளர்களின் தகவல்களை இந்தச் செயலிகள் கேட்பது குறிப்பிடத்தக்கத் தனியுரிமை அபாயங்களைக் கொண்டவையாக இருக்கிறது.

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புகழ்பெற்ற ஜூன் வீடியோ மீட்டிங்க் செயலியைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் தமது பயனாளர்களின் தகவல்களை சீனாவுக்கு தருகிறது என்ற கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறது.

கடந்த மாதம், இந்த சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எரிக் எஸ்யுவான், ஒரு வலைப்பதிவில், தாம் 2007-ல் அமெரிக்க குடியிரிமை பெற்றிருப்பதாகவும் ஜூம் என்பது அமெரிக்க நிறுவனம் என்றும், சீன நிறுவனம் அல்ல என்றும் கூறி இருக்கிறார்.

தியனன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா ஒடுக்குமுறையைக் கையாண்டதை நினைவு கூறும் நிகழ்வை ஜூமில் நடத்தியதற்காக அமெரிக்க அடிப்படையிலான தன்னார்வ செயல்பாட்டாளரின் ஜூம் கணக்கை, இந்த நிறுவனம் முடக்கியது. இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்ற சர்ச்சைகளையும் இந்த நிறுவனம் எதிர்கொண்டது.

முன்னெடுப்பாளர் ஒரு சீன நபராக இருகும்பட்சத்தில், இது சீன நிறுவனம் அல்ல என்று சொல்லும்போதுதான் பிரச்னையாக இருக்கிறது. அந்த இடத்தில்தான் இது சீனாவாக மாறுகிறது” என்கிறார் அமித் பந்தாரி.

“வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் கவனமாக இருப்பது நல்லது “ என்று எச்சரிக்கிறார் ஆய்வாளர்.

2019-ம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, அமெரிக்க பங்கு சந்தைகளில் 156 சீன நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 1.2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

அலிபாபா, டெண்சென்ட், பெய்டு, வேய்போ கார்ப்பரேஷன் மற்றும் சீட்டா மொபைல் உள்ளிட்ட இதர நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: மத்திய அரசின் தடையிலிருந்து பப்ஜி கேம் எப்படி தப்பியது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.