ETV Bharat / opinion

தேர்தல் பதற்றத்தில் அமெரிக்கா! வெற்றி பெறப்போவது யார்? - ஸ்டீவன் ஹெர்மன்

பென்சில்வேனியாவை தவிர்த்து ஜோ பிடன் 270 வாக்காளர் குழு வாக்குகளைப் பெற முடிந்தால், தேர்தலில் பெரும்பகுதி முடிந்துவிட்டது என்று அர்த்தம். முடிவுகளை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் செல்லப் போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

ஸ்டீவன் ஹெர்மன்
ஸ்டீவன் ஹெர்மன்
author img

By

Published : Nov 3, 2020, 1:01 PM IST

நேரில் மற்றும் தபால் வாக்குகள் மூலம் ஏற்கனவே 9 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். ஆனால், மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலில் வன்முறைகள் நிகழலாம் பல அமைப்புகள் கணித்துள்ளது.

"ஜோ பிடனுக்கு ஆதரவளிக்கும் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள், சுயேச்சைகள், ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கவுள்ள குடியரசு கட்சி வாக்காளர்கள் ஆகியோருக்கிடையே பதற்றம் நிறைந்த கவலை தெரிகிறது" என வெள்ளை மாளிகையின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA) தலைவர் ஸ்டீவன் ஹெர்மன் கூறுகிறார்.

"மிச்சிகன் போன்ற மாநிலங்களில் மக்களிடம் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தப்படலாம் என்ற கவலைகள் உள்ளன. ஆனால் உண்மையில் மக்கள் வெளியே சென்று வாக்களிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கரோனா வைரஸ் பற்றிய அச்சங்கள் காரணமாக மக்களிடையே தயக்கங்களை ஏற்படுத்தியது தான், மக்கள் தங்கள் வாக்குகளை ஆரம்பத்தில் அனுப்பியதற்கான ஒரு காரணம்" என்று ஸ்டீவன் ஹெர்மன் கூறுகிறார்.

முக்கியமான கருத்துக் கணிப்புகளுக்கு முன்னதாக வெளிவந்த அறிக்கையின்படி வெள்ளை மாளிகையை சுற்றி எண்ணிலடங்கா தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தனியார் வணிக கட்டடங்கள் எந்தவொரு சேதத்திற்கும் உள்ளாகலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.

"சில அசம்பாவிதங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு அல்ல, மாறாக புதன்கிழமை இரவில் தான் தெளிவான தகவல் தெரியவரும் என்ற கவலை உள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி போராடலாம். இந்த ஆண்டு நடந்த முந்தைய ஆர்ப்பாட்டங்களில் நாம் கண்டது போல் தீவிர இடதுசாரிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் சிக்கலை ஏற்படுத்த, மக்கள் தாமாகவே முன்வந்து போராட வருவதற்கும் ஒரு சிலரை உண்மையிலேயே தூண்டுவதற்கும் இது தேவைப்படுகிறது" என்று டி.சி.யைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசிய ஹெர்மன் மேலும் கூறினார்.

தேர்தல் பதற்றத்தில் அமெரிக்கா! வெற்றி பெறப்போவது யார்?

"வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வாஷிங்டன் டி.சி.யின் தெருக்களில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஜன்னல்களை அடித்து நொறுக்குவதையும், தீ வைப்பதையும் தடுப்பதற்காக ஏராளமான தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம். நிறைய முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வரும் நாள்களில் மக்களின் உள்நாட்டு எழுச்சியை நாம் காணலாம் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் எந்தவொரு சம்பவமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், தேர்தல் முடிவுகள் மற்றும் போட்டியாளர் வெல்லும் வாக்கு வித்தியாசத்தை பொறுத்து இவை நடக்கலாம்" என்று ஹெர்மன் மேலும் கூறுகிறார்.

முடிவுகள் அனைத்தும் வாக்குப்பதிவு எவ்வளவு துல்லியமானது என்பதைப் பொறுத்தது. பென்சில்வேனியாவை தவிர்த்து ஜோ பிடன் 270 வாக்காளர் குழு வாக்குகளைப் பெற முடிந்தால், தேர்தலில் பெரும்பகுதி முடிந்துவிட்டது என்று அர்த்தம். முடிவுகளை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் செல்லப் போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இது ஒரு விதிவிலக்காக இருந்தபோதிலும் தேர்தல் தினத்தின் மாலையில் முடிவுகளைப் பெற முடியும் என்று அவர் நம்புகிறார் என்று அமெரிக்க தேர்தல்களையும் அரசியலையும் பல ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து வரும் ஹெர்மன் கூறுகிறார்.

தேர்தல் முடிவுகள் அல்லது தெளிவான கணிப்புகள் நவம்பர் 4ஆம் தேதி காலை எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் 2000ஆம் ஆண்டில், அல் கோருக்கு எதிராக ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட சட்டப் போர் போல் இம்முறையும் நிகழலாம். அசோசியேட்டட் பிரஸ் போன்ற நிறுவனங்கள் வெற்றியாளரை அறிவித்த பின்னர் தான் பிற செய்தி சேனல்களால் அறிவிக்கும்.

இதுவரை ஜோ பிடன் தேசிய தேர்தல்களில் குறிப்பிடத்தக்க சீரான முன்னிலை வகித்துள்ளார், இது பரப்புரையின் கடைசி சில நாட்களில் ஒற்றை இலக்கமாக சுருங்கிவிட்டது. ஆனால் 2016 கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டனுக்கு வெற்றி கிடைக்கும் என்று முன்னறிவித்த கருத்துக் கணிப்பாளர்களும் நிபுணர்களும் தற்போது எச்சரிக்கையாக இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிளின்டனிடமிருந்து ஒரு ஆச்சரியமான வெற்றியைப் ட்ரம்ப் பறிக்க காரணமாக இருந்த தொழில்துறை மாநிலமான மிட்வெஸ்ட் இந்த முறையும் முக்கியமானதாக இருக்கும். இரண்டு வேட்பாளர்களும் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு, மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

தேசிய தேர்தல்களில் பிடன் 7% அல்லது 4% முன்னிலையில் இருந்தாலும், இவை அனைத்தும் ஒரு சில மாநிலங்களில் உண்மையிலேயே மாறுபடுகிறது, அங்குதான் வேட்பாளர்கள் தங்கள் கவனத்தை செலுத்துகிறார்கள். ஃப்ளோரிடாவில் டிரம்ப் நிச்சயம் வெற்றிபெறுவார் என்று கருதப்படுகிறது. அவர் ஃப்ளோரிடாவை வெல்லாவிட்டால் அது பிடனின் வெற்றிக்கான பாதையாக அமையும்.

இருவரும் பென்சில்வேனியாவை முற்றிலும் முக்கியமாக பார்க்கிறார்கள். திங்களன்று அதிபர், மிச்சிகன் மாநிலத்தில் ஐந்தில் இரண்டு பரப்புரைகளை மேற்கொண்டார். இருப்பினும் பிடன் அந்த மாநிலத்தில் சுமார் 10 விழுக்காடு முன்னணியில் காணப்படுகிறார். எனவேதான் அதிபர் ஏன் மிச்சிகன் மாநிலத்தில் அதிக கவனம் செலுத்துகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்த மாநிலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்பின் ஆச்சரிய வெற்றிக்கு முற்றிலும் முக்கியமாக விளங்கியது. ஏனெனில் கருத்து கணிப்புகள் அனைத்தும் 2016 தேர்தல்களுக்கு சற்று முன்னதாக ஹிலாரி கிளிண்டனை முன்னிலைப்படுத்தின என்கிறார் ஹெர்மன்.

மூத்த அமெரிக்க பத்திரிகையாளரும் செவ்வாயன்று வாக்குச்சாவடிகளில் நேரில் வாக்களிப்பதை உறுதி செய்வதே கடைசி நிமிட பரப்புரை என்று வலியுறுத்தினார். இந்தத் தேர்தல்களில் தீர்மானிக்காதவர்கள் என்று யாரும் இல்லை. கருத்துக்கள் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் தான் வேட்பாளர்களின் இந்த கடைசி நிமிட தோற்றங்களை நாம் பார்ப்பதற்கான உண்மையான காரணம்.

அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை வெள்ளை மாளிகை பக்கம் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை, புளோரிடாவில் மக்கள் வாக்களிக்க செல்வதை உறுதிசெய்ய ஒரு நள்ளிரவு பேரணியை மேற்கொண்டிருந்தார். இது மனதை மாற்றுவதைப் பற்றியது அல்ல. இது செவ்வாயன்று மக்களை வெளியே சென்று வாக்களிக்க மக்களைத் தூண்டுவதற்கு போதுமான உற்சாகத்தை உருவாக்குவதாகும் என்று ஹெர்மன் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.