ETV Bharat / opinion

சீனா மீதான அமெரிக்க தாக்குதல்கள்: பரப்புரையா அல்லது நிலையான திட்டமா?

ட்ரம்பும் பிடனும் வெள்ளை மாளிகைக்காக போராடுகையில், கொள்கை வகுப்பாளர்களுக்கும் அமெரிக்க வாக்காளர்களுக்கும் எதிர்கொள்ளும் முக்கிய தேர்தல் பிரச்சினைகளில் சீனாவும் ஒன்றா? சீனாவுடனான அமெரிக்க உறவுகள் நவம்பர் முடிவுகளுக்குப் பின்னரும் மோதலாகவும் விரோதமாகவும் இருக்குமா? எதிர்கால சீன அமெரிக்க உறவுகள் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? போன்ற விஷயங்கள் # BattlegroundUSA2020-ல் விவாதிக்கப்பட்டன. தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்த விமர்சனங்களிலிருந்து தன் மீதான கவனத்தைத் திசைதிருப்ப ட்ரம்ப் பெய்ஜிங்கை முன்னிறுத்துகிறாரா என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா கேள்வி எழுப்பினார்.

BattlegroundUSA2020
BattlegroundUSA2020
author img

By

Published : Sep 3, 2020, 9:19 AM IST

Updated : Sep 3, 2020, 2:11 PM IST

"ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா நம் நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும். பிடனைப் போலல்லாமல், உலகெங்கிலும், அவர்கள் ஏற்படுத்திய சோகத்திற்கு அவர்களை முழு பொறுப்பேற்க வைப்பேன்” என்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தனது அதிகாரப்பூர்வ மறு நியமன உரையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். நான் ஏற்கனவே சில காலமாக செய்து வருவதை நீங்கள் கவனித்திருந்தால், நமது நிறுவனங்களும் வேலைகளும் நம் நாட்டில் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஜோ பிடனின் கொள்கைகள் “சீனாவிற்காக உருவாக்கப்பட்டது.” எனது கொள்கைகள் ‘அமெரிக்காவிற்காக உருவாக்கப்பட்டது” என்று டிரம்ப் அதிபர் தேர்தலில் தனது போட்டியாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனை குறிவைத்து மேலும் கூறினார்.

1979ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை அங்கீகரிப்பதற்காக பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த முதல் அதிகாரபூர்வ தூதுக்குழுவின் ஒரு அங்கமாக இளம் செனட்டரான பிடன் இருந்தார். ஒபாமா ஆட்சி காலத்தில் துணைத் அதிபராக இருந்தபோது, ​​'வளர்ந்து வரும் சீனா சாதகமானது, நேர்மறை வளர்ச்சிக்கானது ' என்று அவர் அப்போதைய நடைமுறையில் இருந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். பிடனின் வேட்பாளர் நியமன ஏற்பு உரையில் சீனா, ரஷ்யா அல்லது பிற வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், முந்தைய ஜனநாயக கட்சியின் முதன்மை விவாதத்தில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு ‘கொள்ளையன்’ என்று அழைத்தார்.

BattlegroundUSA2020
அதிபர் வேட்பாளர் பிடன்

தேர்தலுக்கான மோதல்கள்

“அமெரிக்க தேர்தல்களில் சீனா இடம்பெறுவது என்பது வழக்கத்திற்கு மாறானதல்ல. குறிப்பாக பொருளாதாரம் குறித்தும், சில சமயங்களில் அவற்றை யார் கையாளப் போகிறார்கள் என்பது பற்றிய உத்திசார்ந்த நிலையிலும் அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் பெயர் அடிபடுவது என்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அதிபர் ட்ரம்ப் அதை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளார், ஏனெனில் அவர் கோவிட் மீது போதுமான நடவடிக்கை எடுக்காததால் அவர் குறி வைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். எனவே சீனாவை முன்னிறுத்தியும், மையப்படுத்தியும் வருவதற்கான ஒரு காரணம், கோவிட்டிற்கு சீனா மீது பழிபோட முயற்சிக்கத்தான்” என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் திட்டமிடல் நிபுணரும் சீனியர் ஃபெலோவுமான தன்வி மதன் கூறினார்.

“எனவே தான் அவர் அதை‘ சீனா வைரஸ்’ என்று அழைப்பார். ஓரளவிற்கு இது சீனர்களால் நம் நாட்டில் பரவியது என்று சொல்ல வேண்டும், நிர்வாகம் இந்த வெவ்வேறு வழிகளில் அவற்றை எடுத்துக்கொள்கிறது. இது அரசியல் ரீதியாக வெல்லும் நடவடிக்கை என்று அவர் கருதுகிறார். ஓரளவு கோவிட் காரணமாக மட்டுமல்ல, குறிப்பாக வர்த்தகம் குறித்தும், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாகவும், அவர் சீனாவைப் பற்றி பேசுவது அவரது ஆதரவிற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார், ”என்று தன்வி மதன் மேலும் கூறினார்.

டிரம்ப், பிடனுக்காக ஒரு ‘சீன பருந்து பொறி’ வகுத்துள்ளாரா, குடியரசுக் கட்சியினர் தங்களது பரப்புரையின்போது பெய்ஜிங் பற்றிய தங்கள் தொனியை கடுமையாக்க நிர்பந்திக்கப்படுவார்களா? மேலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினால் டிரம்ப், சீனா மீது அழுத்தம் கொடுப்பாரா? என்ற கேள்விகள் எழுகின்றன

BattlegroundUSA2020
அமெரிக்கா டிக்டாக் தடை

டிரம்பின் தீவிரம் சற்று குறையும்

"​​குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தீவிரமான அவர்கள் தொனி கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாகும் என்று நான் நினைக்கிறேன். ஜனநாயக கட்சியினர் மனித உரிமைகள் மற்றும் அது போன்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசக்கூடும். ஆனால் வித்தியாசம் அல்லது இடைவெளி இப்போது மிகவும் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன், அதை யாராலும் தக்க வைக்க முடியாது. இது புவி அரசியலைப் பற்றியது, இது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பற்றியது, எந்தவொரு அமெரிக்கத் தலைவரும் அதில் சமரசம் செய்ய விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவால் விடுவதை சீனா நிறுத்தப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என்று தென் கொரியா மற்றும் கனடாவிற்கான முன்னாள் இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.

"ஜனநாயக கட்சியினர் சீனாவைப் பற்றி வேறு விதமாக பேசியுள்ளனர். பிடன் தனது (ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு) உரையில் இதைப் பற்றி பேசியிருக்க மாட்டார், ஆனால் நீங்கள் மற்ற தளங்களையும் அறிக்கைகளையும் பார்த்தால் அவர்கள் ‘நாங்கள் சீனா மீது கடுமையாக இருப்போம்’ என்றும் கூறுகிறார்கள். திட்டமிட்டு செயல்படுவது, கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவது, பொருளாதாரப் கண்ணோட்டத்தில் அமெரிக்க பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் புதுப்பிக்கவும் அவை நியாயமான வர்த்தகம் என்று அழைக்கப்படுவதை உள்நாட்டில் பலப்படுத்துவது போன்ற வழிகளை செயல்படுத்துகிறார்கள். சீன பிரச்சினையில் மக்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் அவர்கள் உலக அரங்கில் பரந்த வெளியுறவுக் கொள்கை சார்ந்த அம்சங்களை கருதி வாக்களிக்கக்கூடும், ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தல், உண்மையில் அதிபர் டிரம்ப்பைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதுதான்” என்று 'விதியின் முக்கோணம்: பனிப்போரின் போது அமெரிக்க-இந்தியா உறவுகளை சீனா எவ்வாறு வடிவமைத்தது' என்ற புத்தகத்தை எழுதியுள்ள தன்வி மதன் குறிப்பிட்டார்.

BattlegroundUSA2020
அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜூலை மாதம் நடந்த ஒரு கருத்துக் கணிப்பின்படி, 61% அமெரிக்கர்கள் ட்ரம்ப் கோவிட்டைக் கையாண்ட விதத்தை ஏற்கவில்லை, ஆனால் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் (64%) சீனாவிலிருந்து பரவியது என்பதை ஏற்கவில்லை. கூடுதலாக, சமீபத்திய பியூ கருத்துக் கணிப்பின்படி, 73% அமெரிக்கர்கள் சீனாவைப் பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். எனவே அமெரிக்க காங்கிரசிலும் உள்ள வலுவான இரு-வேறு சீன எதிர்ப்பு உணர்வுகள், இந்த அரசியல் தாக்குதல்களைத் தூண்டுகிறதா? அரசியலில் தவறான அணுகுமுறை மற்றும் மனோபாவத்திற்கு பெயர் பெற்ற டிரம்ப், சீனா மீதான தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து நிலைத்திருக்கிறாரா?

சீனாவுக்கு வைக்கப்பட்ட குறி

“ட்ரம்பின் நிர்வாகக் கண்ணோட்டத்தில் சீரான ஒரு நிலைத்தன்மை இருந்ததென்றால் அது சீனாவாகத்தான் இருக்கும். 2018ஆம் ஆண்டில் ஹட்சன் நிறுவனத்தில், சீனாவிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி மைக் பென்ஸ் பேசியபோது உண்மையில் எனக்கு மிகவும் சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்காவை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதாகவும், அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், உளவு பார்க்கவும், அதன் இராணுவ வலிமையை அதிகரிக்கவும், அமெரிக்காவை குறிவைக்கவும் சீனா மீது குற்றம் சாட்டிய அந்த வகையான மொழியை நான் பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இது கோவிட்டுக்கு முன்னர் நடந்தது என்பதால் அது நன்றாகவே சிந்தித்து கூறப்பட்டது என்று நான் நினைக்கிறேன், ”என்றார் விஷ்ணு பிரகாஷ்.

"ஒரு நிலையான அணுகுமுறை உள்ளது. இடையில் அதிபர் டிரம்ப் நல்லவராகவும் கெட்டவராகவும் நடித்தார். ‘ஜி ஜின்பிங் நல்ல மனிதர், மற்றவர்கள் மோசமானவர்கள்’ என்றார். ஆனால் இப்போது அது மாறியுள்ளது. அவர்கள் சீனாவை மொத்தமாக குறிவைக்கின்றனர். ஜி ஜின்பிங் தனது நிலையை அதிகப்படுத்தியுள்ளார், இராணுவ ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார்” என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

“ஆனால் அமெரிக்க மக்களிடம் நான் என் வார்த்தையை காப்பாற்றினேன். அமெரிக்க வரலாற்றில் சீனாவுக்கு எதிராக நாங்கள் இதுவரை கடினமான, தைரியமான, வலுவான மற்றும் கடினமான தாக்குதலை மேற்கொண்டோம்” என்று டிரம்ப் தனது குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு உரையில் உரிமை கோரினார். உண்மையான கட்டுப்பாட்டு கோடு சர்ச்சை மற்றும் கல்வான் வன்முறையை அடுத்து சீன-இந்திய உறவுகள் எப்போதுமே இல்லாத வகையில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்கா சீனாவை கடுமையாக தாக்கி வர்த்தகத்தை துண்டிக்க முயற்சிப்பது பாராட்டுக்குரியதா அல்லது இந்தியாவுக்கு சவாலாக இருக்குமா?

BattlegroundUSA2020
அதிபர் டொனால்ட் டிரம்ப்

"80களில் இருந்து டிரம்ப்பிடம் தொடர்ந்து குறிப்பிட்ட சில விஷயங்கள் உள்ளன. கூட்டணிகளைப் பற்றி, வர்த்தகம், குடியேற்றம் பற்றி அவருக்கு வலுவான கருத்துக்கள் உள்ளன. அந்த உள்ளுணர்வு சரியானது என்று அவர் உணருவார் என நான் எதிர்பார்க்கிறேன். வர்த்தகம் குறித்த அவரது உள்ளுணர்வு அவர் அதிக போட்டித்தன்மையுடன் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால் ட்ரம்ப் இருப்பதால், ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்று பெய்ஜிங் சொல்வதை நீங்கள் காணலாம்” என்று தன்வி மதன் கூறினார்.

சீனாவுக்கு எதிராக நாடுகள் ஒருங்கிணைப்பு

தற்செயலாக ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர் பாம்பியோ சீனாவை எதிர்கொள்ள "ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் புதிய குழு - ஜனநாயகங்களின் கூட்டணி" அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால் டெல்லி அதற்கு ஒரு எதிர்மறையான பதிலை அளித்தது. இந்தோ பசிபிக் திட்டமிடலிலிருந்து, நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பயிற்சிகளில் அதிக பலத்தை சேர்ப்பது வரை, அமெரிக்கா பெய்ஜிங்கை உறுதியாக எதிர்கொள்ளுமா அல்லது நவம்பர் மாதத்திற்கு பின் அதனுடன் வணிகத்திற்கு திரும்புமா?

“இதில் டிரம்ப் அல்லது பிடன் யார் என்றாலும் நீங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளை வரையறுக்கலாம். போட்டித்தன்மையுடன், ஆனால் கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும் பிடன் நிர்வாகத்தை நீங்கள் காணலாம். அல்லது தொற்றுநோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் நாம் சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிடன் நிர்வாகம் கூறுவதை நீங்கள் காணலாம், எனவே அது குறித்த விஷயங்களுக்கு இடமளிப்பதற்கான சில வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். சூழ்நிலைகளைப் பற்றியோ, அல்லது ​​கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை கணிப்பது பற்றியோ நீங்கள் நினைக்கும் போது, நிர்வாகத்தில் எந்த பொறுப்புக்கு யார் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் நீங்கள் பார்க்கவேண்டும்” என்று தன்வி மதன் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Last Updated : Sep 3, 2020, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.