ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019ஆம் ஆண்டு ஜூலை வரை பதவி வகித்த வைரல் ஆச்சார்யா, கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். “அவர் ஒரு நிலையான, நடுத்தர வரிசை ஆட்டக்காரராக இருந்தார். பெரும்பாலும் முழு இன்னிங்ஸையும் எதிர்கொள்ளும் ஒருவராக இருந்திருக்கிறார். இந்திய பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கியானது இதே போன்ற பங்கை செயலாற்ற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
வைரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியை விட்டு விலகி இருந்தாலும், ரிசர்வ் வங்கியை திராவிட்டின் குணங்களுடன் அவர் ஒப்பிட்டதை இப்போதும் கூட மறுப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
இப்போது பொதுத்துறை வங்கிகளின் வாரா கடன் (non-performing assets) தொடர்ச்சியான வகையில் அதிகரிப்பதையே காட்டுகிறது. ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கண்காணிப்புகளை கடுமையாக்க வேண்டிய தேவை, முன் எப்போதும் இல்லாத வகையல் எழுந்திருக்கிறது. ஒரு வங்கி கடனின் அசல் தொகை அல்லது வட்டி தொகை தொடர்ந்து 90 நாள்களாக செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால் அது வாராக்கடன் எனப்படுகிறது.
வாரா கடனை குறைக்கும் வகையிலான தீர்வாக 3 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முன்மொழிவை கடந்த ஜூலை 2020-ல் நிதி ஆயோக் முன் வைத்தது.
- யூகோ வங்கி
- பஞ்சாப் & சிந்து வங்கி
- பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
குறிப்பாக, மலைபோல குவிந்திருக்கும் செயல்படா சொத்துகளின் காரணமாக யூகோ வங்கி உள்ளிட்ட நான்கு பொதுத்துறை வங்கிகள், இப்போது ரிசர்வ் வங்கியின் உடனடியாக சீர்செய்யும் நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் இருக்கின்றன. இதனால், மேலும் கடன் கொடுப்பதில் ஈடுபடக் கூடாது என்று அந்த வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேஃங்க் ஆப் இந்தியா மற்றும் யுனிடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இதர மூன்று பொதுத்துறை வங்கிகளும் உடனடியாக சீர் செய்யும் நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் உள்ளன.
6 பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு
வங்கிகளின் விவரம் | மத்தியஅரசின் பங்கு ஜூலை 2020 | மொத்த என்பிஏ -டிசம்பர் 2019 |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | 57.6% | ரூ. 1,84,682 கோடி |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 85.6% | ரூ. 76,809 கோடி |
பேங்க் ஆஃப் பரோடா | 71.6% | ரூ.73,140 கோடி |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 89.1% | ரூ. 49,924 கோடி |
கனரா வங்கி | 78.6% | ரூ. 36,645 கோடி |
பேங்க் ஆஃப் இந்தியா | 89.1 % | ரூ. 33,259 கோடி |
தமது யோசனையை உறுதிப்படுத்தும் வகையில் நிதிஆயோக் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில், ஒட்டுமொத்த கடனில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 2010ஆம் ஆண்டில் 75.1 விழுக்காட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு 57.5 விழுக்காடாக குறைந்து விட்டது. சில பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் போது பொதுத்துறை வங்கிகளின் ஒட்டு மொத்த கடன் பங்கு என்பது மேலும் சரியும்.
இதன் காரணமாக வாரா கடன் மூழ்கும். இதனால் வரும் காலங்களில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் சில தலைவலிகள் ஏற்படக்கூடும்.
ஆனால், அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ரிசர்வ் வங்கி தமது அதிருப்தியை வெளியிட்டது. குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட இந்தியாவின் வளர்ச்சிக்காக பொதுத்துறை வங்கிகள் அத்தியாவசியமானவை என ரிசர்வ் வங்கி கருதியது.
இழப்பாக கருதும் ஆலோசனை; அரசுக்கான இழப்பு சூழல்நிலை, மிகவும் அழுத்தத்துக்கு உள்பட்ட பொதுத்துறை வங்கிகளை வாங்க எந்த ஒரு தனியாரும் முன்வரமாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கி கருதியது. அதற்குபதில், அதிக சொத்துகள் &குறைந்த பட்ச வாரா கடன் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களின் மீது ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கருதியது. குறைந்தபட்ச வாரா கடனை கொண்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படும், அதிக வாரா கடனை கொண்ட வங்கிகள் அரசிடம் இருக்கும். இது தனியார் மயமாக்கலின் நோக்கத்தை தோற்கடிக்கும்.
தனியார் மயமாக்குவதற்காக நிதிஆயோக் பரிந்துரைத்துள்ள பொதுத்துறை வங்கிகள்
வங்கிகளின் விவரம் | மத்திய அரசின் பங்கு | மொத்த என்பிஏ |
யூகோ வங்கி | 92.52 % | ரூ. 22,140 கோடி |
பேங்க் ஆப் மகாராஷ்டிரா | 87.74 % | ரூ. 15,746 கோடி |
பஞ்சாப்&சிந்து வங்கி | 80.28 % | ரூ. 8,924 கோடி |
பொத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து வாதிட்ட ரிசர்வ் வங்கியின் வாரிய உறுப்பினர் சதீஷ் மார்த்தே கூறுகையில், “அதற்கு பதில் அரசு தமது வசம் உள்ள பங்கை 26 விழுக்காடாக குறைக்க வேண்டும். தம்மிடம் உள்ள பங்கில் அதிகபட்ச அளவை இந்தியர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பெருநிறுவனங்கள், வங்கியின் பொறுப்பில் உள்ள முன்னணி நிர்வாகிகள், வங்கியின் ஊழியர்கள் மற்றும் சாதாரண இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்ய வேண்டும்,” என்றார்.
மார்த்தேயின் கூற்றுப்படி, பொதுதுறை நிறுவனங்களின் எந்த ஒரு ஊழியரும் தற்போது வங்கி தம்முடையது என்று கருதுவதில்லை. “எனவே, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. (கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் முதல் உயர் மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் வரை). அவர்கள் பணிபுரியம் வங்கியின் பங்குகள். இதே போலவே பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை பெறுவதற்கு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். வங்கியின் ஒரு பங்கை கொண்டிருக்கின்றோம் என்றும், அதற்கேற்றபடி செயல்பட வேண்டும் என்றும் இயல்பான உணர்வை அவர்கள் வளர்த்தெடுக்க இது உதவும்.
ஆனால், அதே நேரத்தில் எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது குழுவும் பொதுத்துறை வங்கிகளில் அதிகப்படியான கட்டுப்பாட்டை செலுத்த அனுமதிக்காத வகையில் பங்குகளை வாங்குவதற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த உணர்வுக்கு ஏற்ப, இந்த வழியில் ரிசர்வ் வங்கி முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. ஆறு முன்னணி பொதுத்துறை வங்கிகளின் (எஸ்பிஐ., பிஎன்பி., யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பிஓபி., கனரா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா) அரசின் பங்கை 12 முதல் 18 மாதங்களுக்குள் இப்போதைய அதிகபட்ச பங்கு விழுக்காட்டிலிருந்து 51 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று அரசுக்கு முறையாக அறிவுறுத்தியது.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேலும் 3 பொதுத்துறை வங்கிகள்(யூகோ வங்கியைத் தவிர). மேலும் கடன் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் விவரம் | மத்திய அரசின் பங்கு | மொத்த என்பிஏ |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 95.84 % | ரூ. 23,734 கோடி |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா | 92.39 % | ரூ. 33,259 கோடி |
யுனிடெட் பேங்க் ஆஃப் இந்தியா | 89.07 % | ரூ.11,457 கோடி |
தோராயமான கணக்கின்படி இந்த ஆறு பொத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 51 விழுக்காடாக குறைக்கும்போது இந்த வங்கிகள் 43,000 கோடி ரூபாய்-க்கும் மேல் பெற முடியும்.
உள்வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் ஆலோசனையில் ஏராளமான தகுதிகள் இருப்பதாக அரசு கருதுவதாக கூறப்பட்டது. அந்த பாதையை நோக்கி பணியாற்றத் தொடங்கியது. “பட்டியலில் உள்ள ஆறு பொதுத்துறை வங்கிகளின் சொத்துகளின் தரத்தை அதிகப்படுத்துவதான் உடனடியான இலக்காக இருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த ஆறு பொத்துறை வங்கிகளும் எந்த ஒரு பெரிய கடனும் வழங்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த அரசு திட்டமிட்டது. அதற்குப் பதில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாரா கடன் மூன்றில் ஒரு பங்காக குறைப்பதில் அவர்கள் கவனம் இருக்கும்,” என்றனர்.
அரசின் கொள்கை குறித்து நமக்கு ஒரு தகவல் கிடைத்தது. முதலீடுகளுக்கான துறை மற்றும் பொது சொத்து நிர்வாகத்தின் செயலாளர் துஹின் கே பாண்டே கூறும் போது, அனைத்து முக்கிய துறைகளும் அதிகபட்சமாக நான்கு பொதுத்துறைகளின் கீழ் இருக்க வேண்டும் என்பது அரசின் முன்னுரிமையாக இருப்பதாக அண்மையில் குறிப்பிட்டார். மற்றும் வங்கித்துறையை முக்கியமான ஒரு துறையாக அரசு கருதுகிறது.
இதன்காரணமாக அரசு, அனைத்து 12 அரசு பொதுத்துறை வங்கிகளிலும் உள்ள அரசின் பங்கை 26 சதவிகிதமாக முதலில் குறைக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்தை (5 முதல் 10 ஆண்டுகளுக்கு) அரசு கொண்டிருப்பதும் மற்றும் அதன் பின்னர் ஏற்கனவே இருக்கும் எட்டு சிறிய பொத்துறை வங்கிகளை நான்கு பெரிய பொத்துறை வங்கிகளாக மாற்றுவதுதான் இதன் அர்த்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை பின்பற்றும் மோடி 2.0!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியை விட்டு விலகியபோது பொத்துறை வங்கிகளின் வாரா கடன் என்பது ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்தது. நிதித்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ.7.27 லட்சம் கோடியாக இருந்தது. இது 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.5.70 கோடியாக சரிந்தது.
பெரும்பாலான வாரா கடன்களின் தொடக்கம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் (2009-14) போது தொடங்கியதாகும், தொலைத்தொடர்பு ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் ஆகியவை வெளிச்சத்துக்கு வந்தன. லைசென்ஸ் ஒதுக்கீடு செய்ததில் பல விதிமுறைகள் மீறப்பட்டதாக கண்டுபிடிக்கப்படது. எனவே உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து 122 லைசென்ஸ்களுடன் தொடர்புடைய 1.78 கோடி ரூபாய் முதலீட்டை ரத்து செய்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி துறை நிறுவனங்களுக்குத் தரப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 214 நிலக்கரி சுரங்கங்களில் ரூ.2.85 லட்சம் கோடி முதலீடுகள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் & மின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பெரும் அளவிலான கடன்கள் ஒரே நாள் இரவில், வாரா கடன்களாக மாறின.
இதற்கிடையே, ஆளும் கட்சியினர் மற்றும் பெரு நிறுவனங்களின் இந்த புனிதமில்லா தொடர்புகள், வாரா கடன்கள் அதிகரிப்பதற்கு பெரும் பங்களிப்பு செய்தது. பெரிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா, ராணா கபூர் மற்றும் பலரிடம் இருந்து பெரும் அளவிலான நிதியை பெற்ற பின்னர், அரசியல் தலைவர்கள், தங்களது தொழில் நிறுவனங்களுக்கு பெரும் கடன்கள் அளிக்கும்படி பொதுத்துறை வங்கிகளை கட்டாயப்படுத்தினர்.
வாரா கடனை குறைப்பதற்கு மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள்:
முதலாவது கட்டமாக மோடி அரசு பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்தது. சிறிய வங்கிகள் இணைக்கப்பட்டன. வலு குறைவான வங்கிகள் பெரிய வங்கிகளாக, வலுவான வங்கிகளாக மாற்றப்பட்டன. 2017-ம் ஆண்டு 27 வங்கிகள் இருந்த நிலையில் இப்போது 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கின்றன.
திவால் நிலை மற்றும் திவால் குறியீடு 2016 மூலம், தவறான நிறுவனங்கள் மீது தண்டனை அளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் வரி செலுத்துவோரின் 3.5 லட்சம் கோடி ரூபாய் பணத்தை பொதுதுறை வங்கிகளுக்கு வழங்கியது. பொதுத்துறை வங்கிகளுக்கு காலவரம்பின்றி, வரி செலுத்துவோரின் பணத்தை கொடுப்பது நடைமுறை சாத்தியமானது அல்ல என்று அரசு அப்போது உணர்ந்தது.
வாரா கடன் மேலும் அதிகரிப்பதற்கு மோடியின் 1.0 ஆட்சியின் பங்கு
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட பணமுடக்க நடவடிக்கைகள் வாரா கடன் அதிகரிப்பதற்கு முக்கிய பங்கு வகித்தன என்று தனிப்பட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். பணபுழக்கத்தில் செழித்து வந்த ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல், சுற்றுலா, உற்பத்தி துறை உள்ளிட்ட பல துறைகள் பணமுடக்கத்தைத் தொடர்ந்து வந்த மாதங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பொத்துறை வங்கிகளில் பெரும் அளவில் கடன் பெற்ற நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
மேலும் திவால் நிலை மற்றும் திவால் குறியீடு 2016- ஐ பாரபட்ச மின்றி அமல்படுத்துவதில் இருந்து ரிசர்வ் வங்கியை மோடியின் 1.0 அரசு தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் இருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட உடன், உர்ஜித் பாட்டீல், புதிதாக கட்டமைக்கப்பட்ட திவால் நிலை மற்றும் திவால் நிலை குறியீடு 2016-ஐ அமல்படுத்தத் தொடங்கினார்.
இதன் கீழ் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 முதல் 9 மாதங்களுக்குள் வேண்டும் என்றே கடன்களை திருப்பிச் செலுத்த தவறியவர்களின் சொத்துகள் கலைத்து விற்கப்பட்டன. திவாலான நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி தீவிரமாக ஈடுபட்டபோது, மோடியின் 1.0 அரசு ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பியது. (2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை மனதில் கொண்டு) மோடி அரசு, திவால் சொத்துகள் மீதான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டக் கூடாது என்று விரும்பியது.
திவாலான நிறுவனங்களில் பெரும் அளவிலானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். (தேர்தல் வரும் சூழலில் பெரும் அளவிலான வேலை இழப்பை தடுக்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது). இரண்டாவதாக முத்ரா யோஜனா மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் (அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க) பொதுத்துறை வங்கிகள் கடன்கள் கொடுக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும் என்று அரசு விரும்பியது.
நிதி ஒழுங்கில் இழப்பு ஏற்படுத்தும் சூழலில் கூட இதனை மத்திய அரசு விரும்பியது. இதற்கு உர்ஜித் பாட்டீல் அதிருப்தி தெரிவித்தபோது, ரிசர்வ் வங்கியின் முடிவை மீறி அனுமதிக்கும் பிரிவு 7-ஐ அமல்படுத்தப்போவதாக அரசு அச்சுறுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உர்ஜித் பாட்டீல், அவரது பதவி காலம் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரை இருந்தபோதும் இடையிலேயே பதவி விலகினார்.
இதையும் படிங்க: நோ அரியர்... அரியர் வைத்திருந்தால், ஆல் பாஸ் - முதலமைச்சர் அதிரடி!