ETV Bharat / opinion

பொது நிலைப்பாடும் தேசத்தைக் கட்டியெழுப்புதலும்; அரசியலின் பிரிக்க முடியாத இரண்டு பகுதிகள்

லடாக்கில் சீனாவுடனான தற்போதைய நிலையை அமைதியாக தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை(செப். 17) தெரிவித்தார். மேலும், லடாக் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்ததையும் அவர் பாராட்டினர். இவை குறித்து ஈடிவி பாரத்தின் செய்தி ஆசிரியர் பிலால் பட் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்..!

Public posturing
Public posturing
author img

By

Published : Sep 17, 2020, 8:06 PM IST

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் குறுகிய காலம் நடைபெற்றுவரும் மழைகால கூட்டத்தொடரில், உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவத்துக்கு எதிரான இந்திய துருப்புக்களின் நிலை குறித்து தேசத்திற்கு விளக்கியது தேசபக்தியின் தீவிர உணர்வை வெளிப்படுத்துதோடு, 1960களின் மோசமான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது.

லடாக்கின் வறண்ட தரிசு மலைகளில் புற்கள் வளர்கின்றனவோ இல்லையோ, அது இன்னும் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பு அளிக்கிறது என்பதை மழைகால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது உணர்ச்சிமிக்க உரையில் வலியுறுத்த முயன்றார்.

லடாக்கின் சர்ச்சைப் பகுதியில் ஒரு புல் கூட வளரவில்லை என்று 1961இல் நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு கூறிய கூற்றைப் போலல்லாமல், இந்திய பிரதேசத்தின் ஒரு அங்குல இடத்தைக் கூட நமது துருப்புக்கள் விட்டுக் கொடுக்கவில்லை என்று ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

நேருவின் காங்கிரஸ் சகாக்களில் ஒருவரான மகாவீர் தியாகி அவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக “இங்கு எதுவும் வளரவில்லை… அதற்காக அதை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டுமா?” என்று ஒரு கிண்டலான கருத்தை வெளியிட்டார். அந்த அறிக்கை நேருவின் அரசியல் பிம்பத்தை மோசமாக்கியது.

மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் லடாக் வருகை பாராட்டப்பட்டதுடன், அந்த பகுதிக்கு பிரதமர் வருகை தந்த பின்னர் இந்திய துருப்புக்களின் மன உறுதி அதிகரித்திருப்பதாக சிங் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எல்லை பகுதியில் ராணுவத்தின் தயார்நிலை பற்றி விரிவாகக் கூறிய ராஜ்நாத் சிங், "நீண்ட கால பணிக்கு இந்தியா தயாராக உள்ளது" என்றார்.

வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி வரை இருக்கும் லடாக்கின் உயரமான பகுதியில் கடுமையான வானிலையை எதிர்கொள்ள துருப்புக்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளன.

ராஜ்நாத் சிங்கின் ஒவ்வொரு வார்த்தையும் மிகச்சரியாக கூறப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா உரிமை கோருவது மற்றும் லடாக்கில் 5180 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை பாகிஸ்தான் சீனாவிற்கு அளித்தது போன்ற எல்லை பகுதியின் தற்போதைய நிலையை ஒப்புக் கொள்ளவும் மதிக்கவும் சீனாவை கேட்டுக்கொள்வதற்கு, அது குறித்த இந்தியாவின் கருத்துகளுக்கு சீனா மாறுபட்டு இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக ஜூன் 15 அன்று சீனத் துருப்புக்கள் கால்வன் பள்ளத்தாக்கில் வன்முறையை மேற்கொண்டு, இந்தியாவின் வழக்கமான ரோந்துப் பகுதியைத் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருபுறமும் பெரிய படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையின் விளைவாக, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் தற்போதைய நிலையை மாற்றும் எந்தவொரு மோதலையும் தவிர்க்க ஜூன் 6ஆம் தேதி இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

உண்மையான கட்டுப்பாட்டு கோடு நிலையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும், ராஜதந்திர ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ இருந்தாலும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜ்நாத் தனது மக்களவை அறிக்கையின் போது சீனாவிற்கு மற்றொரு தெளிவான எச்சரிக்கையை வழங்கினார்.

1962க்கு முன்னர் இந்தியாவின் ராணுவத் தயார் நிலையும் மோசமாக இல்லை. திபெத், கென்செமனே, தோலா போஸ்ட் மற்றும் மேக் மோகன் கோட்டிற்கு அருகிலுள்ள சில கிராமங்களை கண்காணிக்க தங் லா போஸ்ட் போன்ற பல இடங்களில் இந்தியா வியூக ரீதியில் சாதகமான நிலைகளில் இருந்தது.

நேரு அரசு 1959 முதல் போர் தொடங்கும் வரை ரோந்து பகுதிகளில் இருந்த அனைத்து முக்கிய இடைவெளிகளையும் அடைத்தது. போதுமான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது இருப்பதைப் போன்ற அரசியல் மற்றும் ராஜதந்திர தோரணை அப்போது இல்லை. நாடாளுமன்றத்திலும், வெளியே கூறப்பட்ட அறிக்கைகளும் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கவில்லை. அரசியல் தோரணை தளர்வாக இருந்தது. எல்லைகளை நிர்வகிக்கும் பல்வேறு துருப்புக்களுக்கு இடையிலான தொடர்பில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது.

கிழக்கு எல்லையை நிர்வகிக்கும் அசாம் ரைபிள் போன்ற துருப்புக்களுக்கு ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் சிவில் அரசிற்கு அறிக்கை அளிக்கும் அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கு எல்லை நெறிமுறை பற்றி எதுவும் தெரியாது.

60களில் எல்லைப் பிரச்னையில் சர்வதேச தோரணை போதுமானதாக இல்லை பொருத்தமற்றதாக இருந்தது. சீனா ஆக்கிரமிப்பாளராக இருப்பது உலகத்தை பாதிக்கும் என்பது இந்த நேரத்தில் முற்றிலும் அம்பலமானது. அப்போதைய நேரு அரசுடன் ஒப்பிடும்போது சர்வதேச ரீதியான அணுகல் இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது.

1959ஆம் ஆண்டு எழுச்சியின் போது திபெத்தியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பின்னர், இந்தியாவின் சிறப்பு படையான சிறப்பு எல்லைப்புற படை நேருவின் சிந்தனையில் உருவானதாகும். அதன் உறுப்பினர்கள் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் லடாக்கில் இறந்த பின்னர் தான் இந்த படையை பற்றி தற்போதைய அரசு கூறியது என்பது சீனாவுக்கு ஒரு பெரிய அடியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நேருவின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது, ஆனால் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சூழலில் பொது தோரணை என்பது அரசியல்வாதிகள் மிகச் சிறந்ததை அறிந்து கொள்வார்கள்.

இதையும் படிங்க: 'எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.