ராணுவ தொழிற்சாலையில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு குறித்த பேச்சுவார்த்தை சில நாள்களாக விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. தற்சமயம் ஆயுத தொழிற்சாலைகளின் (ஓஎஃப்டி) நிறுவனமயமாக்கல் குறித்துதான் நிறைய கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன.
பெரும்பாலானவர்கள் இதைச் சுலபமான உடனடி வருவாய் தரக்கூடிய முயற்சியாகப் பார்க்கிறார்கள். தேசிய பாதுகாப்புத் துறையில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு என்பது பெரும்பாலான நாடுகளில் ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியார் துறை பங்களிப்பு பெரும்பாலும் பனிப்போர் முடிவடைந்த பின்னர் அதிகரித்து காணப்பட்டது, இதன் விளைவாக பெருமளவில் ராணுவபலம் குறைந்து, ஆயுதங்களுக்கான தேவைகள் பெருமளவில் குறைந்தன.
இந்தியாவில், அதற்கு நேர்மாறாக பாதுகாப்பிற்கான நேரடி மோதல்கள் நாட்டின் எல்லைக் கோடுகள் வரை பரவியுள்ளது. செலவு திறன் அடிப்படையில் இது மிகவும் அவசியமானதாக இருந்தாலும், புலனாய்வு பணியகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் நிறுவன செயல்திறன் குறைதல் மற்றும் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் போதுமான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ராணுவத்தின் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் செயல்பாடுகள் (MRO) ஆகியவற்றை வழங்கும் ராணுவ பட்டறைகளில் உத்திசார் வழிநடத்துதல் மற்றும் செயல்படுத்தும் திட்டத்தை வழங்குவதற்காக, அரசாங்கத்திற்கு சொந்தமான, ஒப்பந்தக்காரர்களால் இயக்கப்படும் கோகோவின் (GOCO) முன்முயற்சியாக ராணுவ அமைச்சகம் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC)ஐ ஆலோசகராக நியமித்தது.
ராணுவத்தின் முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டை தனியார்களிடம் ஒப்படைப்பது என்ற எண்ணம் கொண்ட அணுகுமுறைதான் பிரச்னையாக உள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. ஒழுங்கு மற்றும் ஒத்துழைப்பை நினைக்காத தலைவர்கள், எப்படியாவது கோகோ செயல்படுத்த ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் முடிவு எடுத்தனர்.
கொடுக்கப்பட்ட விலைக்கு பெறப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ஒரு அனுபவமற்ற முயற்சியாகும். உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் பெறப்பட்ட தனித்துவமான தொழில்நுட்பங்களின் கலவையான ABWக்கள் பொறியியல் கோட்டைகளாகும், அவை நடைமுறை அறிவைக் கொண்டவை என்ற உண்மையை அது கவனிக்கவில்லை, ஒரு வழக்கத்திற்கு மாறான ஆயுதங்களின் இருப்பு, போர் தயார்நிலைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அறியவில்லை.
முப்பது ஆண்டுகள் பழமையான போஃபோர்ஸ், எல்லையில் சுடுவதற்கான முக்கிய ஆதாரமாக இன்னமும் தொடர்கிறது என்பது நமது அறிவாற்றலை பயன்படுத்தாதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை பயன்படுத்த வழித்தடங்களை அமைப்பதும், அதிக உயரத்தில் இருந்து துப்பாக்கியால் சுடுவதற்கும் பராமரிப்பவர்களுக்கு கடுமையான முயற்சிகள் தேவை.
நாட்டின் நீண்டகால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, வளைகுடா போரின்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒரு உச்சபட்ச பணி தயார்நிலை, எழுச்சி திறன் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றை அடைவதற்கு கோகோவை பொதுத்துறை தனியார் கூட்டாண்மையின் (செயல்திறனை அதிகரித்தல்) ஏற்றுக்கொண்டது போல, ஒரு உலக பார்வை தேவை.
இந்திய எல்லைக் கோடுகளில் இருந்த நிலைப்பாடு வழக்கமான தயார்நிலையின் முக்கியத்துவத்தை மீட்டெடுத்துள்ள நிலையில், பராமரிப்பு, பழுதுநீக்கம், இயக்குதல் போன்றவற்றிற்கு ஒப்பந்ததாரரை நியமிப்பதற்கு பதிலாக தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ABWக்களை பயன்படுத்த ராணுவம் யோசிக்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களுடனான உறவு, செயல்பாட்டு தயார்நிலையை பாதிக்கும்.
ஆயுதத் தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக ஆயுதப்படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளன, அவை DRDOவால் உருவாக்கப்பட்டது அல்லது வெளிநாட்டிலிருந்து பயிற்சி பெற்று உருவாக்கப்பட்டது.
ஆயுத தொழிற்சாலைகளின் தயாரிப்புகளில் தரம், செலவுகள் மற்றும் திட்டமிட்ட நேரம் குறித்து ஆயுதப்படைகள் உண்மையான கவலைகளை எழுப்பி வருகின்றன. சரியான நேரத்தில் உற்பத்தி, குறைந்த பணியாளர்கள், தொழில்துறை சிறந்த நடைமுறைகளை நவீனமயமாக்கல் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை நிச்சயமாக உள்ளது.
இருப்பினும், நெருக்கடி காலங்களில் விநியோகங்களை அதிகரிக்கும் திறன்; களத்தில் இருக்கும் அமைப்புகளின் பணி தயார்நிலையை உயர்த்துவதற்கு தேவையான துணை அமைப்புகளுடன் பராமரிப்பவர்களை உடனடியாக அனுப்பும் நடைமுறை போன்ற சில தனித்துவமான நன்மைகள் கவனிக்கப்படவில்லை.
பனிப்போரின் இறுதி வரை இதேபோன்ற நடைமுறைகள் பெரும்பாலான வளர்ந்த நாடுகளால் பின்பற்றப்பட்டன. CDS குறிப்பிடும் இரண்டு போர்களின் அனுபவங்கள் மூலம், இந்த ஆலோசனை ஒரு ஒற்றை நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானது, அதாவது, பனிமலையின் உச்சியில், எங்கும் நிற்காமல் ஒரு சிறந்த இந்திய சிப்பாய் கடைசி வரை தொடர்ந்து செயல்பட தேவையான தீவிர நம்பகமான தாக்குதல் துப்பாக்கிகள், டாங்கிகள், துப்பாக்கிகள் போன்றவற்றை வழங்க வேண்டும்
இந்த ஆலோசனை குழுவானது கோகோவுக்காக PwC ஏற்றுக்கொண்ட இரண்டு குழுக்களுக்கிடையில் எதிர்ப்பு நிலை (`Us vs Them’ ) நிலைப்பாட்டைப் போலல்லாமல் ஆயுத தொழிற்சாலைகளுடன் இணைந்து வெளிப்படையான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும், -
மக்களின் கவனத்தை ஈர்க்கும் போது தான் நிறுவனங்களில் நீண்டகால மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முடிவுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியத்துவத்துடன், ஊழியர்களின் நல்வாழ்வு, வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை குறித்து அக்கறை இருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது சவால் அல்ல, ஆனால் திறமை தான் சவாலானது. திறமை என்பது ஒத்துழைப்பு, புதுமையான, அதிக செயல்திறன் கொண்ட, நம்பத்தகுந்த அல்லது வெளிப்படையானவையாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த முயற்சிகள், சுழலில் சிக்குவதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்பட்டு அதன் விளைவாக அரைகுறையாக செயல்படுத்துதல் மற்றும் இடையூறு ஏற்படுகிறது.
ராணுவ அமைச்சகம், அதன் கீழ் நிறுவனமயமாக்கப்பட்ட பல DPSUக்களைக் கொண்டிருந்தாலும் அவைகளும் தரம், செலவு மற்றும் எந்தவொரு புதுமையான கண்டுபிடிப்புகள் இல்லாமல் இருப்பது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியர்களைத் தோற்கடிக்க நேச நாட்டுப் படைகளுக்கு பெரிதும் உதவியதுடன், இரண்டு போரை வென்றெடுப்பதற்கான செயல்பாட்டு முறைகளை நமது ஆயுதப்படைக்கு வழங்கியது.
சுய சார்புக்கான பிரதமரின் அழைப்பு உண்மையாக இருக்க வேண்டுமானால், DIB அதையே முன்னெடுக்க வேண்டும். உள்ளூர் DIBஇன் அடிப்படையான ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் DPSUகள் கோவிட் பிந்தைய ஆயுத அமைப்புகளின் வளர்ச்சியை மேற்கொள்வதற்கான அறிவாற்றலை கொண்டுள்ளன.
அவை குறைந்த அளவிலான கட்டமைக்கும் இடமாக இல்லாமல், உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு, அதிகமான ஆராய்ச்சி மற்றும் புதுமை அடிப்படையிலான தொழில்துறை நிறுவனங்களின் களத்திற்கு செல்ல வேண்டும், அவ்வாறு இருந்தால் அதன் படைப்பாற்றல் அன்னை இந்தியாவைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் நன்மை அளிக்கும்.
தனியாருடன் தீவிர துணை அமைப்பு அளவிலான ஒத்துழைப்புடன் முக்கிய திறன்களுக்கும், உற்பத்தியின் செயல்திறனை அதிகரிக்க வலுவான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆயுத அமைப்புகள் ஒரு ராணுவ விளைவை உருவாக்க ஒன்றிணைக்கும் பல தொழில்நுட்பங்களை இணைக்கின்றன. ஆயுதங்களின் கண்டுபிடிப்பாளராகவும், ஏற்றுமதியாளராகவும் இருக்க வேண்டுமெனில், இதுபோன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். ஆயுத தொழிற்சாலைகளின் பெரு நிறுவனமயமாக்குவதில் செலவுகளை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்தினால் தான் பிரதமரின் நோக்கத்தை அடைய முடியும்.
செய்திகுரியவர் : லெப்டினென்ட் ஜெனரல் என். பி. சிங்
(இந்த செய்தி தனிநபர் கருத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதற்கும் ஈடிவி பாரத் ஊடகத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது)