ஹைதராபாத்: உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்சாய் -யின் புகழ்பெற்ற வழிகளை மேற்கொள் காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக, எங்கு எப்போது எதனை பேச வேண்டும் என்பது அவருக்கு தெரியாது. அந்தப் பதிவு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அறங்கேறியது. ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் படங்களை பதிவேற்றி, “பொறுமையும், நேரமும் மிகப்பெரிய போர் வீரர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து என்ன நடந்தது? இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா பிரிந்து சென்றுவிட்டார். தற்போதைய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வென்றால், அது சிவராஜ் சிங் சௌகானின் வெற்றியாக பார்க்கப்படும். அதேநேரம் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியுறும்பட்சத்தில் அது ஜோதிராதித்ய சிந்தியாவின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதையெல்லாம் காலமும் நிச்சயம் கடந்து செல்லும்.
குறிப்பாக இது ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடினமான காலம். சம்பால் பகுதியிலுள்ள 34 தொகுதிகளில் 16 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் ஆறு இடங்களை தன்வசம் வைத்திருந்தது. அதில் ஐந்து தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதில் இரு தொகுதி, சிந்தியா ஆதரவாளர்கள் மிக்க தொகுதியாகும்.
மேகன் மற்றும் கோகட் தொகுதிகளில் பாஜக ஏற்கனவே வலுவாக உள்ளது. எனினும், குவாலியர், குவாலியர் (கிழக்கு) மற்றும் தப்ரா தொகுதிகளில் சிந்தியா ஆதிக்கம் செலுத்துவார். பாந்தர் மற்றும் தாதியா தொகுதிகளில் அவர் சிறிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார். சிவ்புரி, கரைரா மற்றும் பூரி தொகுதிகளில் சிந்தியாவின் தாக்கம் பகுதியளவு காணப்படலாம்.
சிவ்புரியில் வசுந்தராவின் கை ஓங்கி காணப்படுகிறது. பமோரி தொகுதியை பொறுத்தமட்டில் சிந்தியாவின் தாக்கம் காணப்படாது. இங்கு திக் விஜய் சிங் வலிமைமிக்கவராக காணப்படுகிறார்.
காங்கிரஸை விட்டு வெளியேறிய 24 மணி நேரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்தார். அவர் தனது வாழ்க்கையில் இரண்டு தேதிகள் மிக முக்கியமானவை என்று கூறினார். முதல் நாள் செப்டம்பர் 30, 2001, அவர் தனது மரியாதைக்குரிய தந்தையை இழந்த நாள். இரண்டாவது நாள் 2020 மார்ச் 10, அவரது தந்தையின் 75 வது ஆண்டுவிழா.
இந்த நாளில் அவர் பாஜகவில் சேர முடிவு செய்தார். அவர் சரியான முடிவை எடுத்தாரா என்று பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வாழ்க்கையில், நம்முடைய முடிவுகளின் அடிப்படையில் வெற்றி அல்லது தோல்வியை அடைகிறோம். சிந்தியாவிலும் இதேதான் நடக்கிறது. இந்த மாற்றத்துக்கு, பின்னர் அவர் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆனார்.
ஆனால் அது சரியான தேர்வாக இருந்ததா என்பது வருங்கால தேர்தல்களால் தீர்மானிக்கப்படும். சிந்தியாவுடன் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வேட்பாளர்கள் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டனர். அவர்களில் 14 பேர் அமைச்சர்கள். பாஜகவில் சிந்தியாவின் எதிர்காலம் அவரது வெற்றியால் தீர்மானிக்கப்படும். அவர் வென்றால், சிந்தியா தன்னை ஒரு மத்திய அமைச்சராக்க அழுத்தம் கொடுத்து அரசியல் விளையாட்டை ஆட முடியும். ஆனால் அவர் தோல்வி அடையும் பட்சத்தில் இதெல்லாம் கானல் ஆகும்.
இந்தத் தேர்தல் பரப்புரையின் போது சிந்தியா வாக்காளர்களிடம் என்னை வெற்றிபெற வையுங்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவருக்கு நிர்பந்தம் இருப்பது போல் தெரிகிறது. மேலும் பாஜகவின் பரப்புரை படங்களில் சிந்தியாவின் படம் இடம்பெறவில்லை. இது பாஜகவுக்கு விவேகமானதாக கருதப்பட்டாலும், அது சிந்தியாவுக்கு பின்னடைவுதான்.
மேலும் ஜோதிராதித்ய சிந்தியா கோபமாகவும், சோர்வாகவும் காணப்படுகிறார். பாஜகவின் பட்டியலின வேட்பாளர் இமார்த்தி தேவியை, கமல்நாத் அவமதித்தது சிந்தியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த வார்த்தை தாக்குதலில் மனக்காயமுற்ற இமார்த்தி தேவிக்கு அவர் ஆறுதல் கூறியதையும் காண முடிந்தது. இதற்கிடையில் ஜோதிராதித்ய சிந்தியாவின் அரசியல் நடத்தைகளும் மக்களை குழப்பம் மற்றும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிந்தியாவின் முதலமைச்சர் பதவிக்கு கமல்நாத் தடையாக இருந்தால் என்று மக்கள் நினைத்தால் அவருக்கு ஆதரவு கொடுக்கலாம். அதேசமயம் இவ்வாறெல்லாம் நடக்கவில்லை, இதெல்லாம் சிந்தியாவின் அவசரத்தனம் என்று நினைத்தால் இந்நிலை மாறலாம்.
எது எவ்வாறாயினும் கடைசி கட்ட தேர்தல் பரப்புரை வரை களத்தில் ஜோதிராத்திய சிந்தியா பதற்றமாகவே காணப்பட்டார். இமார்தி தேவிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது கூட அவரின் நாக்கு தடுமாறி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியதை காணமுடிந்தது. நவம்பர் 3ஆம் தேதி தேர்தலும் முடிந்துவிட்டது. மக்கள் காங்கிரசுக்குதான் வாக்களித்தார்களா? அந்த உண்மை இன்னும் சோதிக்கப்படவில்லை.
பொறுமையும், நேரமும் மிகப்பெரிய போர் வீரர்கள்!
இதையும் படிங்க: தாவனகரே குடும்பம் செய்த முகக்கவசங்களை அணிந்த நரேந்திர மோடி!