ETV Bharat / opinion

மக்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாக்க தனிப்பட்ட ‘தரவு பாதுகாப்புச் சட்டம்’ - இந்திய சீன எல்லை

டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்று சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் ஜி-20 நாடுகள் சந்திப்பில், இந்தியா சுட்டிக்காட்டியது. சீனாவின் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ வரவேற்றுள்ளார்.

இந்தியா சீனா
இந்தியா சீனா
author img

By

Published : Jul 25, 2020, 8:34 PM IST

ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீனா உடனான மோதலுக்குப் பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து டிக்டாக், வீ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்தது.

இச்சூழலில் ஜி-20 நாடுகளைச் சார்ந்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களுடனான கானொலி காட்சி சந்திப்பில் இந்தியா மற்றும் சீனாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசும்போது, “சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், “தரவு தனியுரிமை, பாதுகாப்பு, குடிமக்களின் இறையாண்மை உரிமைகளை டிஜிட்டல் தளங்கள் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்று கூறினார். “பல்வேறு நாடுகளில் உள்ள டிஜிட்டல் தளங்கள், நம்பகத்தன்மையோடும், பாதுகாப்போடும் மாற வேண்டிய அவசியம் இருக்கிறது” என்றும் பாதுகாப்பின் அவசியத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

இந்தியா சீனா
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

ஜி-20 நாடுகள் தலைமைப் பொறுப்பை கையில் வைத்துள்ள சவூதி அரேபியா நடத்திய இந்த மாநாட்டில் மேலும் பேசிய ரவிசங்கர் பிரசாத், “பாதுகாப்பு, ராணுவம், தனிநபர் தரவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் டிஜிட்டல் தளங்கள் சம்பந்தப்பட்ட இறையாண்மை மிக்க நாடுகளுக்கு பதில் அளிக்கக்கூடிய பொறுப்புணர்வு மற்றும் உணர்வுத்திறன் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கைப்பேசி செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்ததைத் தொடர்ந்து, இது உலக வர்த்தக நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்று இருதரப்பு உறவுகளுக்கான சந்திப்பில் வலுவான கவலைகளை சீனா வெளிப்படுத்தின.

இதற்கிடையே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்களுக்கு அனுப்பிய உத்தரவில், தடை உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் அல்லது ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று கூறப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!

ஜி-20 நாடுகள் சந்திப்பில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், “தரவு பொருளாதாரத்துடன் ஒரு கையில் இருந்து இன்னொரு கையின் வழியே டிஜிட்டல் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது தரவுகளின் மீதான இறையாண்மையையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தரவுகள் என்பது சம்பந்தப்பட்ட இறையாண்மை நாடுகளைக் கொண்டதாக, அதன் மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தியா சீனா
தடைசெய்யப்பட்ட சீன செயலிகள்

இதில் பங்கேற்ற ஜி 20 நாடுகளின் பிரநிதிதிகளிடம், “பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைக்கான தரவுகள் தேவையை உறுதி செய்யும் வகையிலும் குடிமக்களின் தரவு தனியுரிமை தொடர்பான கவலைகளை தீர்க்கும் வகையிலும் ஒரு வலுவான தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா விரைவில் கொண்டு வர உள்ளது” என்று தெரிவித்தார். ஆரோக்கிய சேது செயலியை சுட்டிக்காட்டிய அவர், “கோவிட் 19-க்கு எதிரான போரில் இந்தியாவின் டிஜிட்டல் புதுமை முயற்சிகள்” உதவுவதாகத் தெரிவித்தார்.

இந்தியா முன்னுதாரணம்

இதற்கிடையே, அமெரிக்க, இந்திய வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த இந்திய ஆலோசனைகள் உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, “20 இந்திய வீரர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த கல்வான் மோதல்கள், சீனாவின் ஏற்றுக்கொள்ள முடியா நடத்தைக்கு உதாரணமாகும். கைப்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது வரவேற்கக்கூடிய ஒன்று. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் . நம்மைப் போன்ற ஜனநாயக நாடுகள் இதில் இணைந்து செயல்பட வேண்டும். முன் எப்போதையும் விட குறிப்பாக மேலும் தெளிவான உண்மையான நம்பிக்கைகளை நாம் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

20 இந்திய வீரர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த கல்வான் மோதல்கள், சீனாவின் ஏற்றுக்கொள்ள முடியா நடத்தைக்கு உதாரணமாகும். கைப்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது வரவேற்கக்கூடிய ஒன்று.- மைக் பாம்பியோ

மேலும் பேசிய அவர், “சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த அண்மை கால மோதல்கள் அந்த கட்சியின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு இப்போதைய உதாரணம் மட்டும்தான். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு நாம் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றோம். நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சியில் நம்முடைய நலன்களை நாம் பாதுகாக்க முடியும் என நான் நம்புகிறேன்.

தடை செய்யப்பட்ட சீன செயலிகள்... மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

இந்திய மக்களுக்கு தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக இருக்கும் டிக்டாக் போன்ற சீனாவின் 59 கைப்பேசி செயலிகளுக்கு தடைவிதிக்கும் இந்தியாவின் முடிவை நான் சிறப்போடு குறிப்பிட விரும்புகின்றேன். இந்தோ-பசிபிக் மற்றும் உலக அளவில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் இந்தியா ஒரு பங்குதாரராக வளர்ந்து வருவதையும் நான் மகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றேன்” என்றார் பாம்பியோ.

இந்தியா சீனா
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ

இந்தியா ஆலோசனைகள் மாநாட்டில் இன்னொரு விவாதத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பங்கேற்ற செனட் அமெரிக்க-இந்தியா காகஸின் இணைத்தலைவர் மார்க் வர்க் வார்னர், “சீனா ஆதிக்கம் செலுத்துவதை எதிர்கொள்ள, தொழில்நுட்பத்தில் புதுமை படைக்கும் இந்தியா போன்ற நாடுகளை உலக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தியா சீனா
இந்திய சீன எல்லை

“மருந்து , தொலைபேசி போன்ற துறைகள் மற்றும் பிற துறைகளின் விநியோகத்தில் சீன நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் , சீனாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் வகையில் சர்வதேச விநியோக சங்கிலியில் இந்தியா பங்கேற்கும் வாய்ப்பைப் பெறவேண்டும். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் நம்பிக்கையை பெற்ற நாடு என்ற வகையில் இந்தியா இந்த நிலையில்தான் இருக்கிறது” என்றும் பாம்பியோ கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.