ETV Bharat / opinion

சிஏஏவுக்கு எதிர்ப்பு...தமிழ் தேசியவாதத்தை கையிலெடுக்கும் அதிமுக!

"பாஜகவுடனான கூட்டணி தேர்தலுக்காக மட்டுமேயன்றி, ஒருபோதும் கருத்தியல் ரீதியாக இருக்காது" என, சில நாட்களுக்கு முன்பு ஊடக மாநாடு ஒன்றில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

தமிழ் தேசியவாதத்தை கையில் எடுக்கும் அதிமுக

author img

By

Published : Mar 16, 2021, 11:55 AM IST

மூத்த பத்திரிகையாளர் பிரின்ஸ் ஜெபக்குமார் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

மீண்டும் தொடக்கப்புள்ளியில் வந்து நிற்கிறது அதிமுக. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிகொள்ளும் ஆளும் அதிமுகவின் முடிவு, ஈழம் உள்பட பல விவகாரங்களில் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை காட்டுகிறது. பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும், பெரியார், அண்ணா போன்றவர்களால் தங்களின் தாய் இயக்கம் எவ்வாறு பிறந்து வளர்ந்தது என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், தற்போது அந்த தொனி, மனநிலை ஆகியவற்றில் மாற்றம் காணப்படுகிறது. தமிழ் தேசியவாதக் கொள்கையுடன் ஒரு இணக்கம் காணப்படுகிறது.

"பாஜகவுடனான கூட்டணி தேர்தலுக்காக மட்டுமேயன்றி, ஒருபோதும் கருத்தியல் ரீதியாக இருக்காது" என, சில நாட்களுக்கு முன்பு ஊடக மாநாடு ஒன்றில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சிஏஏ சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதாக பாஜக நாடாளுமன்றத்தில் கூறியதாகவும், எனவேதான அதை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு தாங்கள் வந்ததாகவும், சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் விளக்கம் அளித்த அதிமுக, தற்போது சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளது. சிஏஏவை கைவிடுவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதி, பாஜகவை சங்கடத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி. மறுபுறம், இலங்கையைச் சேர்ந்தவர்கள் இப்போது இங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்குவதற்கு ஏதுவாக நாடுகளின் பட்டியலைத் திருத்துவதாக திமுக உறுதியளித்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவித்தல், தனி தமிழீழத்தை உருவாக்குதல், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நடுநிலை அமைப்பின் வழிமுறை மூலம் நீதி வழங்குவதற்கு அதிமுக மீண்டும் வலியுறுத்துகிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள மாகாண அரசாங்கத்திற்கு முழு அதிகாரங்களை வழங்க பாடுபடப்போவதாக திமுக தனது பங்கிற்கு கூறியுள்ளது. இந்தியாவில் தங்குவதற்கு முடிவுசெய்தவர்களுக்கான இந்தியக் குடியுரிமை மற்றும் நிரந்தர வசிப்பிடம் என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.

இந்தியாவில் மார்க்சிஸ்டுகளின் ஒரு பகுதியினரால் தேர்தல் அல்லாத பிரச்சினையாக நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, எப்போதும் இரு பெரிய திராவிடக் கட்சிகளின் அரசியல் மையத்தில் உள்ளது. இந்தத் தேர்தலிலும் இது மாறுபட்டதல்ல என்பதை அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் தேசியவாதம்

இரு கட்சிகளும் தமிழ் அதிகாரபூர்வ தேசிய மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று விரும்பினாலும், தமிழ் தேசியவாத இயக்கங்களின் நீண்டகால கோரிக்கையான தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் 100 விழுக்காடு வேலைகளையும், தனியார் துறையில் 75 விழுக்காடு வேலைகளையும் தமிழர்களுக்கு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வருவதாக திமுக உறுதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மறுபெயரிடவும், சென்னையில் ஒரு உச்சநீதிமன்ற அமர்வு அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக மாற்றுவோம் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி பதவிகளுக்கு தேசிய அளவிலான தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தேர்வுகளை நடத்த வலியுறுத்துவதாகவும், பிற மதங்களுக்கு மாறிய எஸ்சி / எஸ்டிக்கு இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவதாகவும் அதிமுக உறுதியளித்துள்ளது.

அடுத்த அரசுக்கான நடவடிக்கைகள் தயாராக உள்ளன

இரண்டு அறிக்கைகளிலும் தமிழ் தேசியவாதத்தைப் பற்றிய அறிவிப்பு உள்ளது. அதைப் புறக்கணிக்க விரும்புவோரைத் தவிர்ப்பது எளிதல்ல. பெரிய திராவிடக் கட்சிகள் காங்கிரசை வீழ்த்தி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கின்றனர், தங்களை நீதிக் கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றின் வேர்கள் என்றும் பாரம்பரியத் தலைவர்களுடன் இணைந்த மரபுகள் என்றும் அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

கொள்கையளவிலும் கருத்தியல் ரீதியாகவும், சிறுபான்மையினர் மற்றும் சமூக நீதிக்கான கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளிலும் இரு கட்சிகளின் நிலைப்பாடும் அவர்களில் அறிக்கைகளின்படி ஒன்றுதான். இது ஒரு வரலாற்று கட்டாயமாகும். யார் தமிழ்நாட்டை வென்றாலும், கூறப்பட்ட திட்டங்களை அவர்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை செய்யவில்லை என்றால், அது அவர்களின் தேர்தல் செயல்பாட்டிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.