ETV Bharat / opinion

இந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி டிராகன் குகையில் நுழைந்த இந்திய படை

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. பல கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் குறித்து ஈடிவி செய்தி ஆசிரியர் பிலால் பட் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்...

author img

By

Published : Jun 18, 2020, 8:15 PM IST

Galwan face-off
Galwan face-off

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஜூன் 16 நடைபெற்ற மோதல் சம்வம் குறித்து முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏனெனில் இந்தச் சம்பவம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை இருந்தபோது, ரோந்துக்கு இந்திய வீரர்கள் ஆயுதமின்றி சென்றது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.

ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜூன் 15ஆம் தேதி இரவு கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய ராணுவத்தினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய எல்லையில் அமைக்கப்பட்ட சில கட்டுமானங்களைக் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அப்போது, இந்திய வீரர்கள் அந்தக் கட்டுமானத்தை அகற்றுமாறு சீன வீரர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட குழப்பம், பெரும் சண்டையில் முடிந்தது. இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

சுமார் 4,000 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியை பேணுவதற்கு, இரு நாடுகளும் 2013ஆம் ஆண்டு கையெழுத்திட்ட எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும்(Border Defense Cooperation Agreement) 1996ஆம் ஆண்டு கையெழுத்திட்ட எல்லைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளன. இந்த ஒப்பந்தங்களை இரு நாடுகளும் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது குறிப்பாக இதுபோன்ற ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளபோது, ஆயுதங்களை ஏந்திச் செல்ல கூடாது என்று எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆயுதமேந்திய சீன படைகள் அப்பகுதியில் உள்ளனர் என்பதை அனைத்து செயற்கைக்கோள் படங்களும் தெளிவாக காட்டின.

இருப்பினும், ஒருவருக்கொருவர் ராணுவ பலத்தையும் ராணுவ திறன்களையும் பயன்படுத்த இந்த ஒப்பந்தங்கள் அனுமதிப்பதில்லை. மாற்று நாட்டு வீரர்கள் (இந்தியாவோ/ சீனாவோ) ரோந்து செல்லும்போது அவர்களை பின்தொடரகூட அனுமதியில்லை. ஏதாவது, ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதியில் பிரச்னை உருவானால், அதை எப்படி தீர்க்க வேண்டும் என்பதும் அந்த ஒப்பந்தங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஒரு வேலை,ரோந்து செல்லும்போது மாற்று தரப்பினர் எல்லையை தாண்டிவந்திருந்தால், பேனர் மூலம் மாற்று தரப்பினரை தொடர்பு கொள்ளலாம். இதற்காகவே எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகில் இருக்கும் படைகளிடம் ‘நீங்கள் எங்கள் எல்லைக்குள் இருக்கிறீர்கள் அல்லது தயவுசெய்து திரும்பிச் செல்லுங்கள்’ என்று பதாகைகள் தயார் நிலையில் இருக்கும்.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி என்பது இன்னும் இரு தரப்பு ஒத்துழைப்புடன் முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே மீறல்கள் என்பது தவிர்க்க முடியாதவை. எல்லைகளில் ஏற்படும் மோதல்களைக் கையாள்வதற்கு, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை ஹாட்லைன்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் அடிக்கடி நடக்கும்.

பல்வேறு எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பதற்றங்களைக் குறைக்க இரு தரப்பினரும் உள்ளூர் மட்டத்தில் தொடர்புகொள்ள மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள். பொதுவாக, ஒரு பெரிய ரோந்து செல்லும்போது மொழிபெயர்ப்பாளர்களும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பணியமர்த்தப்படும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன மொழியும் ஆங்கில மொழியும் சரளமாக பேச தெரிந்திருக்கும். அதேபோல, இந்தியும் ஆங்கிலமும் பேச தெரிந்தவர்களையே சீனாவும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பணியமர்த்தும்.

கார்னல் பாபு தலைமையிலான வீரர்கள் ரோந்துக்கு செல்லும்போது வெளிப்படையான தகவல் இல்லையென்றபோது, தாக்குதலை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், முன்னதாக மே 5-6 தேதிகளில் நடைபெற்ற மோதலில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தை வேண்டுமென்றே பின்வாங்க செய்யும்போது ஏற்பட்டது. இது BDCA ஒப்பந்தத்தை மீறும் ஒரு செயலாகும்.

பொதுவாக ராணுவ விதிகளின்படி, எந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், வீரர்கள் தங்கள் தற்காப்புக்காக ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், பதற்றமான சூழ்நிலை இருந்தபோது ஆயுதங்களின்றி ராணுவ வீரர்கள் ரோந்து சென்றது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஏதேனும் மோதல் நிகழ்ந்தால், அது தேசியத்தை பாதுகாக்கும் ஒரு வீரருக்கு எதிராக மாறலாம்.

எனவே, செவ்வாய்கிழமை இந்திய வீரர்கள் ஆயுதமின்றி ரோந்து சென்றது ஏன்?, யாருடைய அறிவுறுத்தலில் சீன ராணுவத்தை சரியான வழிமுறையின்றி எதிர்கொண்டனர் உள்ளிட்ட கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. கடந்த காலங்களில், ராணுவ ரோந்து வீரர்கள் ஆயுதங்களுடனேயே ரோந்து சென்றுள்ளனர்.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. சொல்லப்போனால், துப்பாக்கிகளை நிலத்தை நோக்கி பிடித்திருப்பதே அமைதியை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும்.

எனவே, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய நெறிமுறைகள் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டன. இவை உயிரிழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கும், எல்லைகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்களுக்கும் பல கேள்விகளை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க: கல்வானில் என்னதான் நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.