ETV Bharat / opinion

ஹமாஸை வளர்த்தெடுத்தது இஸ்ரேலா? யாசர் அராபத்துக்கு செய்த துரோகம்..! மார்பில் பாயும் வளர்த்த கடா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 5:21 PM IST

hamas israel war issue: 360 சதுர கிலோ மீட்டரில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கும் நெருக்கடி மிகுந்த காசா பகுதி இடைவிடா தாக்குதலின் படுகளமாக மாறியிருக்கிறது. தற்காத்துக் கொள்ள இயலாத பெண்கள் குழந்தைகள் மீது இஸ்ரேலிய படைகள் சொல்லொண்ணா துயரை திணிப்பதாக எழுதியிருக்கிறது ஈநாடு பத்திரிகையின் தலையங்கம்.

ஹமாஸ் போர்
ஹமாஸ் போர்

ஐதராபாத்: பேரழிவு ஆயுதங்கள் மனிதகுலத்தின் பிரச்சனைகளை அதிகப்படுத்துமே தவிர, மனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. அப்பாவிகளின் ரத்தத்தால் நனைந்திருக்கும் மண்ணில் அமைதி திரும்ப இது மட்டுமே தீர்வாகும். மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல், அங்கு நிலவும் கள யதார்த்தத்தை முகத்திலறைந்தாற்போல சொல்லுகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, காசா மீது இடையறாத தாக்குதலை தொடுத்திருக்கிறது இஸ்ரேல். 360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரம் தாக்குதலின் இலக்காக மாறியிருக்கிறது. நிராயுதபாணியான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சொல்லொண்ணா, துயரை இஸ்ரேலிய படைகள் திணித்துள்ளன. அதே நேரத்தில் காசா மக்கள் மீது போரை தொடுப்பது தங்கள் நோக்கமல்ல எனவும் இஸ்ரேல் கூறுகிறது.

இதனைக்காட்டிலும் மேற்கு காசாவில் வசிக்கும் சுமார் 11 மில்லியன் பாலஸ்தீனியர்கள், 24 மணி நேரத்திற்குள்ளாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கெடுவிதிக்கப்பட்டது. பேரழிவு ஏற்படுத்தும் பிரச்சனைகளின் ஊடே சராசரி மக்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து வரும் இந்த பிரச்சனையை தொடங்கி வைத்தது யார்? பெஞ்சமின் நேதன்யாகு, தற்போதைய இஸ்ரேலிய பிரதமரான இவர், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பதவிக்கு தேர்வானார். தீவிர வலது சாரி ஆதரவுடன் இப்பதவிக்கு வந்திருப்பதன் மூலம், வரலாற்றின் சார்பு அரசியலை இந்நாட்டிற்கு வழங்கியவராக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார்.

இவருடைய அமைச்சரவையில் கூட பல பாலஸ்தீனத்திற்கு எதிரான இனச்சார்பு கொள்கை உள்ளவர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவின் மூலம் இஸ்ரேலிய குடியேறிகள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் வரையறுக்கப்படாத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமே பாலஸ்தீனியர்களுக்கு எதிரான 310 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மேற்குக்கரை பகுதியில் 200 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரான பென்னி கான்ட்ஸ் கூட இத்தகைய வன்முறைகளை கண்டிக்கத் தவறவில்லை. இந்த நடவடிக்கைகளை தவறாக வழிநடத்தப்படும் யூத தேசியவாதத்தால் நிகழும், பயங்கரவாதத்தின் அபாயகரமான விளைவுகள் என அவர் விமர்சித்துள்ளார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, கவலை தோய்ந்த குரல்கள் மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளன. பாலஸ்தீனிய மக்களை சிறுமைப்படுத்தி நடத்துவதன் மூலம் பேரழிவுக்கான விதைகளை நேதன்யாகு தலைமை விதைத்திருப்பதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் வருத்தம் அளிக்கும் வகையில், இந்த கருத்துக்கள் தற்போது உண்மையாகத் துவங்கியுள்ளன. சாதாரண மக்களின் வாழ்க்கை இரக்கமற்ற வகையில் நசுக்கப்படுகிறது.

இஸ்ரேலில் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதோடு, அந்நாட்டவர்களை கடத்தியும் சென்ற ஹமாஸ் அமைப்பின் தோன்றல்களை ஆராய்வது, சிக்கலான வரலாற்று அரசியல் மற்றும் பிராந்திய காரணிகளை தெளிவுபடுத்தும். இந்த பிரச்சனையின் மூல காரணம், குழப்பமான வரலாற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஸ்ட்ரிப்பை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டாய இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக யாசர் அராஃபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொரில்லா போர்முறையை கையிலெடுத்தது.

பின்னாட்களில் அரசியல் தீர்வை முன்னிறுத்திய பாலஸ்தீனிய விடுதலை இயக்கம்(பிஎல்ஓ) மதச்சார்பற்ற தேசியவாதத்தை பேசியது. இது முதற்கட்டமாக பாலஸ்தீனர்களின் ஆதரவைப் பெற்றது. ஆனால் காலம் செல்லச் செல்ல பழமைவாத பாலஸ்தீனிய பிரிவினரை யாசர் அராபத்துக்கெதிராக அணி திரட்டுவதை இஸ்ரேல் வழக்கமாக்கியது. அவர்களுக்கு அராபத்தின் மதச்சார்பற்ற கொள்கைகள் கசக்கவே செய்தன. பாலஸ்தீனிய சமூகத்தில் பிளவை ஏற்படுத்த இஸ்ரேல் செய்த முயற்சியின் நேரடி விளைவு தான் ஹமாஸ். சர்வதேச அரங்கில் பாலஸ்தீனியர்களுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தைப் பெற யாசர் அராபத் முயற்சித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஹமாஸ் வன்முறையை கையிலெடுத்திருந்தது.

படிப்படியாக உள்ளூர் ஆதரவைப் பெற்ற ஹமாஸ், இஸ்ரேலின் கைப்பாவையாக மாறி நின்றது. ஹசபோலா உள்ளிட்ட மற்ற இஸ்லாமிய ஜிகாதி இயக்கங்களுடனும் ஹமாஸ் கைகோர்த்து நின்றது. இஸ்ரேலுக்கு எதிரான பாரம்பரிய எதிரியான ஈரானும், இதில் துணை நின்றது. மத்திய கிழக்கின் தன்மையானது தொடர்ந்து மாறுதலுக்குட்பட்டது. பல அரபு நாடுகள் கூட இஸ்ரேல் உடனான உறவை வலுப்படுத்திக் கொள்ள எண்ணின.

அதே நேரத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் கருத்துக்களை புறந்தள்ளி விட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது தனது பிடியை மேலும் இறுக்கியது. ஐநா தீர்மானத்தின் படி ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து விலகவும் இஸ்ரேல் மறுத்தது. 1967ம் ஆண்டு போரின் போது கைப்பற்றப்பட்ட பகுதிகளை திரும்ப கொடுப்பது மற்றும் ஜெருசலேமில் உள்ள பசுமை கோட்டினை பின்பற்றுவது உள்ளிட்ட விதிளை இந்த ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துகிறது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது போன்று ஹமாஸ் இஸ்ரேலின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே உக்ரைனில் ரஷ்யாவின் ஊடுருவல் பிரச்னையை பற்ற வைத்திருக்கும் நிலையில், இஸ்ரேலில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் நம்மை மேலும் ஆபத்தான சூழலுக்கு தள்ளியிருக்கிறது. மேற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த முடிவில்லா வன்முறையை முடிவுக்கு கொண்டுவர, இந்தியா மற்றும் சர்வதேச சமூகங்கள் இணைந்து, சுதந்திரமான இறையாண்மை உடைய பாலஸ்தீனத்தை உருவாக்க, அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் முயல வேண்டும். இஸ்ரேல் இதற்கு செவிமடுக்குமா? என்ற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை, இந்த பதற்றத் தீயை அணைப்பது, இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே பெரிய அளவில் நன்மை பயக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.