ETV Bharat / opinion

குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் - criminals in public life

நாட்டில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள்

author img

By

Published : May 14, 2021, 6:35 PM IST

முன்னுதாரணமாக நாடாளுமன்றம்

முதல் பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு நாட்டின் மிக உயர்ந்த சட்டத்தை உருவாக்கும் அமைப்பாக உருவெடுத்த இந்திய நாடாளுமன்றம் தற்போது 70ஆவது ஆண்டுக்குள் நுழைகிறது. இந்திய நாடாளுமன்றம் நடைமுறைக்கு வந்தபோது, ஜனநாயக இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியபடி, உங்கள் முயற்சிகள் மக்களுக்கு சிறந்த நன்மைகளைத் தரும் என்று நான் நம்புகிறேன், மேலும் இந்த நாடாளுமன்றம் சிறந்த செயல்பாட்டிற்கான மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன் என்ற பொன்னான வார்த்தைகளுடன் தனது முன்னோக்கிய பயணத்தை தொடங்கியது

நாட்டின் வரலாற்றை கட்டமைக்கும் நாடாளுமன்றம்

உலக மக்கள்தொகையில் ஏழில் ஒருபங்கு உள்ள நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கும் ஒரு சிறந்த நிறுவனமாக நாடாளுமன்றம் இருக்கும் என்று பண்டிட் ஜவஹர்லால் நேரு விவரித்தார். மக்களவையின் முதல் சபாநாயகர் கணேஷ் வாசுதேவ் மவ்லங்கர், உயர்ந்த பாராளுமன்ற மரபுகளையும் மதிப்புகளையும் நிலைநிறுத்த அயராத முயற்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற செய்தித்தாளான தி கார்டியன், 1954ஆம் ஆண்டில் பண்டிட் நேருவை முழு ஆசியாவிற்கும் ஒரு கல்விசாலை என்று கூறி, இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டியது. அந்த நாட்களில் மாண்புமிகு உறுப்பினர்கள் பொது சேவைக்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

கேள்வி எழுப்ப லஞ்சம்

அந்த நாட்களில் நாடாளுமன்றம் மிகச்சிறப்பான தொலைநோக்கு சார்ந்த பண்புகளை வெளிப்படுத்தியது. தங்களது அரசியல் தொடர்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறு செய்த உறுப்பினர்களை அகற்ற ஒன்றிணைந்தனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபெரோஸ் காந்தி, முட்கல் என்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்ப ரூ.2000 வாங்கிய நெறியற்ற செயலை அம்பலப்படுத்தினார். முட்கல் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த போதிலும், அப்போதைய பிரதமர் நேரு அவரை 1951 செப்டம்பரில் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். இதன்மூலம் நாடாளுமன்றத்தின் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பைக் காட்டினார்.

குற்றப்பின்னணி கொண்ட நபர்கள்

17 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு பெரிய தலைவர்களால் உருவாக்கப்பட்ட அந்த மதிப்புகள் எங்கே மறைந்தன? நாடாளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை ஒவ்வொரு அவையிலும் குற்ற பின்னணி கொண்ட நபர்கள் நிறைந்திருப்பதால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது?

குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள்
குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள்

அரசாங்கத்தின் வருவாய் மற்றும் வருமான விவரங்களைப் பற்றி விவாதிக்க ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்தை ஒன்று கூட்டினர். ஆனால், இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபின், நாடாளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையில் ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்று ஒரு விதியை உருவாக்கியது. ஜனநாயக பொறுப்புக்கூறலின் அங்கமாக, அரசாங்கம் மக்களவையில் பதிலளிக்க வேண்டும் என்று டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தனது அரசியலமைப்பில் விதித்திருந்தார். இன்று, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை எனும்போது நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது

நாட்டின் சுதந்திரத்தின் பொன்விழா கொண்டாட்டங்களின் போது இந்தியாவுக்கான 14 அம்ச திட்டத்தை நாடாளுமன்றம் வெளியிட்டது. பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வு மிக்க நாகரிக கலாச்சாரத்தில் மலர்வதற்கு பதிலாக, இந்திய ஜனநாயகம் பணம், சாதி, மதம் மற்றும் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளாக சிதைந்துள்ளது.

14வது மக்களவையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் 24 விழுக்காட்டினர் குற்றப்பின்னணி உள்ளவர்களாக இருந்தனர். அடுத்த மக்களவையில் அத்தகைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடாக உயர்ந்தது, கடந்த மக்களவையில் 34 விழுக்காடு உறுப்பினர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாகவும், தற்போதைய மக்களவையில் அவர்களின் எண்ணிக்கை 43 விழுக்காடாகவும் உள்ளது. ஒரு உறுப்பினருக்கு மந்திரி பதவியை வழங்க, குற்றப் பின்னணி தடையாக இருக்கக்கூடாது என்று மன்மோகன் சிங் அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்ததை இங்கே நினைவு கூர்வது சிறந்தது.

நிரந்தரமாக நீக்கப்படும் அரசு ஊழியர்

ஒரு அரசு ஊழியர் ஒரு குற்ற வழக்கில் அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். ஆனால் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொதுமக்கள் பிரதிநிதியாக இருப்பதை தடுத்து நிறுத்துவது என்பது முரண்பாடாக உள்ளது.

இது சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று கூறி, ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கான உறுதிமொழிக்கு கட்டுப்பட்டவர்கள், எந்தவொரு பணி விதிக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று கூறியுள்ளது. அடுத்தடுத்த வந்த அரசாங்கங்களும் குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகளையே கொண்டுள்ளன. இவ்வாறு அவர்கள் பயிரை மேயும் வேலிகளுக்கு ஆதரவளித்து அதன் மூலம் நாடாளுமன்றத்தின் கவுரவத்தை குறைக்கிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.