ETV Bharat / opinion

20 ஆண்டுகளுக்கு பின் தாலிபன்களிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்! - பாகிஸ்தான்

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க ஆதரவிலான அதிபர் அஷ்ரப் கானியின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து விவரிக்கிறார் ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட்.

Afghanistan
Afghanistan
author img

By

Published : Aug 16, 2021, 11:01 PM IST

ஹைதராபாத் : பத்து நாள்கள் பெரும் போருக்கு பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் தாலிபன்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விழுந்தது. அமெரிக்க தயவில் ஆட்சி செலுத்திய அஷ்ரப் கானியின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆப்கானிஸ்தான் குடிமக்கள் பயமுறும் நிலையில், தாலிபன்கள் அங்கு இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் 2001இல் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவந்தது.

பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) தாக்கப்பட்டதற்கு பழிவாக்கும் நோக்கோடு வந்த அமெரிக்க ராணுவ படைகளின் நடவடிக்கைகள் ஆதாயத்தை கொடுக்கவில்லை. தாலிபன்கள் தங்களது வழக்கமான பழங்குடி போர் முறையை பின்பற்றி பயணித்தனர்.

இதற்கிடையில் அமெரிக்கா மூன்று லட்சம் ஆப்கானிய படைவீரர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு போர் பயிற்சி அளித்தது. ஆனால் இன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவருடன் உளவுத்துறை தலைவர் அம்ருல்லா சலே (Amrullah Saleh)வும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவர்தான் தாலிபன்களுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைக்கும் துணை நின்றார்.

இவர், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு எதிரான ராணுவ படை அமைத்த தளபதி அஹமது ஷா மசூத்தின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர்.

Afghanistan

இவருக்கு தற்போது அமெரிக்கா ஆதரவு அளிக்கவில்லை, ஆகையால் அடுத்துவரும் அசம்பாவிதங்களை எதிர்கொள்ள அவர் விரும்பவில்லை. அஹமது ஷா மசூத் கொல்லப்பட்ட பின்னர் சலே எழுந்துநின்றார். அப்போது, அமெரிக்காவுக்கு அவர் தேவைப்பட்டார், தற்போது அமெரிக்கா கைவிட்டதால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

2000ஆவது ஆண்டில் அம்ருல்லா சலே தலைமையிலான ஆப்கானியப் படைகள் தாலிபன்களுக்கு எதிராகப் போராட விரும்பின.

இதனை ஸ்டீவ் கோல் (Steeve Coll) தனது 'டைரக்டரேட் (Directorate)' என்ற புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அம்ருல்லா சாலேக்கு ஜெர்மனியின் மூலம் அமெரிக்கா நிதியுதவி மற்றும் ராணுவ உதவி செய்தாலும், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தஜிகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தாலும், அவரால் தாலிபன்களை ஒழித்துக்கட்டி முன்னேற முடியவில்லை.

ஆப்கான் போர்: இந்தியாவின் வணிகத்தில் பாதிப்புகள் என்ன?

மறுபுறம் செப்டம்பர் 11இல் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவை மாற்றியது. தாலிபன் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா தீவிரம் காட்டியது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா நேரடியாக களமிறங்கியது.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 2011இல் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அதன்பின்னர், அமெரிக்காவின் முக்கிய நோக்கம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, 'பயங்கரவாதத்திற்கு' எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர அமெரிக்காவிற்கு பெரிய உந்துதல் இல்லை.

தாலிபன்களுக்கு எதிராக தினசரி சண்டைகள் குறித்து அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இது அவர்களின் பொருளாதாரத்தை பாதித்தது.

கொடூரமான ஆப்கானிய பழங்குடி படைகளை எதிர்த்து போராடி, தங்கள் நாட்டின் பணத்தை வீணடிப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார்.

தற்போது ஜோ பிடன் 2021இல் இறுதி செய்துள்ளார். அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தாலிபன்கள் விறுவிறுவென முன்னேறியுள்ளனர்.

இதனை அமெரிக்கா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. சில நாள்கள் பிடிக்கும் என்றே கருதினர். இது அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தாலிபன்கள் குறித்து அமெரிக்காவின் அத்தனை கணிப்பும் வீணாகிவிட்டன.

காபூல் நகரத்துடன் சேர்ந்து முழு நாடும் விரைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக (20 ஆண்டுகள்) அமெரிக்கா உருவாக்கிய உளவுத்துறை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.

உண்மையில்... நாட்டில் என்ன நடக்கிறது என்பது அமெரிக்காவுக்கு தெரியும் என்பது ஒரு மாயை. தாலிபன்கள் வாய்ப்பு கிடைக்கும்போது மாகாணங்களை கைப்பற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்துள்ளனர். இதனை அமெரிக்கா முன்கூட்டியே அறியவில்லை. அமெரிக்க வீரர்கள் திரும்பியதும் செயல்பட தொடங்கிவிட்டனர்.

Afghanistan

பக்ராமின் மிகப்பெரிய விமான படைதளம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதெல்லாம் அஷ்ரப் கானி நிர்வாகத்துக்கு கூட தெரியாது. இன்று அமெரிக்கா ஒரு பாதுகாப்பான வெளியேற்றத்தை விரும்புகிறது.

மறுபுறம், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தாலிபன் எதிர்ப்பு படைகளுக்கு ஆதரவளிக்க உறுதியாக விரும்பவில்லை. ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

ஆப்கானிஸ்தான் அரசு வீழ்ச்சியடைவதற்கு முன்பு, தாலிபன் தலைமை அனைத்து அண்டை நாடுகளுக்கும் சென்று தங்கள் ஆதரவைப் பெற்றது.

இதில் ஈரான், சீனா, தஜிகிஸ்தான், ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கும்.

மேலும் தாலிபன்களும் தங்களுக்கு ஆதரவு கிடைக்காவிட்டாலும் இந்நாடுகள் நடுநிலையாக நிற்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஒரு நாட்டின் அரசியல், புவிக்கோள அமைப்பு உள்ளிட்டவற்றை புரிந்துகொள்ளாமல் முடிவெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.

லோயா ஜிர்கா (பழங்குடி மற்றும் மதஅடிப்படைவாதிகள் அமைப்பு) ஆப்கான் சமூகத்தில் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒரு தீர்க்கமான பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பினர் ஆப்கானிஸ்தானின் அன்றாட விவகாரங்களில் தலையிட அனைத்து உரிமைகளும் உள்ளன. தாலிபன்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய நாட்டின் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் முக்கிய கூறுகளில் ஒன்று லோயா ஜிர்கா.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் பெண்கள் குறித்து மலாலா கவலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.