ETV Bharat / opinion

விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கும் பூஞ்சை நோய்!

வங்கதேச எல்லையில் 1,91,000 ஹெக்டேர் நிலத்தில் கோதுமை சாகுபடி தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சாகுபடி செய்வது தடை செய்யப்பட்டால், கோதுமைக்கான நெருக்கடி அதிகரிக்கும். மாநில அரசு கோதுமை சாகுபடியை மாற்று வழிகளில் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், உற்பத்தி தடைபடும்.

பூஞ்சை நோய்
பூஞ்சை நோய்
author img

By

Published : Nov 25, 2020, 3:48 PM IST

கோதுமை பயிரில் கொடிய பூஞ்சை நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு 2017ஆம் ஆண்டு, மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையிலான சர்வதேச எல்லையில் உள்ள முர்ஷிதாபாத், நாடியா மாவட்டங்களின் பகுதிகளில் கோதுமை உற்பத்திக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த இரண்டு மாவட்டங்களில் எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மூன்று ஆண்டுகள் கோதுமை பயிரிடக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அந்தத் தடையை மாநில அரசும் அப்பகுதியில் அமல்படுத்தியது. தொடர்ந்து, முர்ஷிதாபாத், நாடியா மாவட்டங்களில் உள்ள 8,000 ஏக்கர் விவசாய நிலங்களில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது.

இந்தத் தடை காலம் தற்போது முடிவடைந்தாலும்கூட இப்பகுதியில் கோதுமை சாகுபடியை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக மாநில விவசாயத் துறையும் வேளாண் விஞ்ஞானிகளும் உள்ளனர். மாநில விவசாயத்துறை உயர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ”கோதுமை சாகுபடி இப்போது மீண்டும் தொடங்கினால், கோதுமை பூஞ்சை நோய் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றார். இந்திய-வங்கதேச விவசாயிகளுக்கு இடையில் முறைசாரா விதைப் பரிமாற்றம் முர்ஷிதாபாத், நாடியா மாவட்டங்களில் சுலபமாக நடைபெறுகிறது.

இந்த இரண்டு மாவட்டங்களும் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ளன. இந்தக் கொடிய கோதுமை பூஞ்சை நோய் பரவுவதற்கு காரணமான பூஞ்சை வங்கதேசத்திலிருந்து பரவியது. இது படிப்படியாக ஆசியாவின் முழு கண்டத்திற்கும் பரவியது. எனவே, இந்த விதைப் பரிமாற்றம் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வரை அந்தப் பகுதியில் கோதுமை சாகுபடியை மீண்டும் அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

இருபுறமும் எல்லைத் தாண்டிய கால்நடைகளும் பூஞ்சை நோய் கடத்திகளாக செயல்படுகின்றன. கோதுமை பூஞ்சை நோய் பொதுவாக பூஞ்சையால் ஏற்படுகிறது. மேலும் இந்தப் பூஞ்சைகள் கால்நடைகள் வழியாக எளிதாக பரவக்கூடும். முதன்முதலில், 1975ஆம் ஆண்டில் பிரேசிலில் கோதுமை பூஞ்சை நோய் பரவி அந்த நாட்டில் கிட்டத்தட்ட முழு கோதுமை உற்பத்தியையும் பாதித்தது. 2016ஆம் ஆண்டில், வங்கதேசம் வழியாக ஆசியாவிற்குள் பூஞ்சை பரவியது. அதன் காரணமாக அந்த ஆண்டில் வங்கதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் சுமார் 20,000 ஹெக்டேர் நிலம் எரிக்கப்பட வேண்டியிருந்தது.

இந்தியாவுடன் 4,096 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்து கொள்கிறது. அதில், 2,227 கிலோமீட்டர் மேற்கு வங்கத்துடன் உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க வேளாண்துறை அமைச்சர் ஆஷிஷ் பானர்ஜியை தொடர்பு கொள்ள ஈடிவி பாரத்திலிருந்து பலமுறை முயன்ற போதிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பூஞ்சை நோயால் மாநிலத்தில் கோதுமை சாகுபடி பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அகில இந்திய கிரிஷக் சபாவின் தலைவர் அமியா பத்ரா ஏற்கனவே தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் வங்கதேச எல்லையில் 1,91,000 ஹெக்டேர் நிலத்தில் கோதுமை சாகுபடி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சாகுபடி செய்வது தடை செய்யப்பட்டால், கோதுமைக்கான நெருக்கடி அதிகரிக்கும். மாநில அரசு கோதுமை சாகுபடியை மாற்று வழிகளில் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், உற்பத்தி தடைபடும் என்றும் அவர்கூறினார்.

முன்பு லத்தீன் அமெரிக்காவிலிருந்து இந்தக் கொடிய நோய் மாநிலத்திற்குள் நுழைந்ததாக வேளாண் விஞ்ஞானி தபஸ் ராய் கூறினார். கோதுமை பூஞ்சை நோய் என்பது மாநிலத்தின் விவசாயத் துறையின் மிகப்பெரிய பிரச்னையாகும். மாநிலத்தின் நாடியா, முர்ஷிதாபாத் மற்றும் இந்திய வங்கதேசம் எல்லைப் பகுதிகளில் இந்த பிரச்னை கடுமையாக உள்ளது. எனவே, மாநில வேளாண் துறை கோதுமைக்கு பதிலாக பருப்பு வகைகள் அல்லது எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

Blight Disease என்ற இந்தக் கொடிய நோய் இதற்கு முன்பு ஆசியாவில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். பிரேசில் உள்ளிட்ட பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த நோய் நீண்ட காலமாக இருந்தது. இந்த நோய் சமீபத்தில்தான் வங்கதேசத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.