முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 'அடக்கி ஆளுது முரட்டு காளை..' காளையோடு மல்லுக்கட்டும் காளையர்கள்..நேரலை
🎬 Watch Now: Feature Video
Published : Jan 19, 2024, 9:43 AM IST
|Updated : Jan 19, 2024, 2:04 PM IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாயும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்..! அதன் நேரலையை காணலாம்..
தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமான புதுக்கோட்டையில் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், கடந்த ஜன.6-ல் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு இனிதே தொடங்கியது. கடந்த ஜன்.17-ல் நடந்த வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை நகர காவல் கண்காணிப்பாளர் ராகவி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகளும் 350 காளையர்களும் பங்கேற்க உள்ளனர்.
முன்னேற்பாடாக, நூற்றுக்கணக்கான காவல்துறையினர் முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.