திருச்சி விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி! - Modi trichy visit
🎬 Watch Now: Feature Video
Published : Jan 2, 2024, 12:18 PM IST
|Updated : Jan 2, 2024, 1:39 PM IST
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை இன்று (ஜன.2) திறந்து வைக்கிறார். அதனை நேரலையில் காணலாம்..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் பிரதமர் மோடி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்.
முன்னதாக, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று (ஜன.2) காலை 10.30 மணியளவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதைப்போல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இவ்விழாவில் சிறப்புரை ஆற்றினர். அதில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி எனவும், "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற பாரதிதாசன் வரிகளைச் சுட்டி காட்டி தமிழில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.