Palamedu Jallikattu Live: 'தொட்டுப் பாரு..' பாலமேடு ஜல்லிக்கட்டில் பாயும் காளைகள்..திணறும் காளையர்கள்..! நேரலை.. - பாலமேடு
🎬 Watch Now: Feature Video
Published : Jan 16, 2024, 10:01 AM IST
|Updated : Jan 16, 2024, 11:03 AM IST
மதுரை: 'தைப்பொங்கல்' திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மதுரை 'பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி' (Palamedu Jallikattu) மஞ்சமலை ஆற்றுத்திடலில் இன்று (ஜன.16) வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை நேரலையில் காணலாம்..
பாலமேடு கிராம் பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து துவக்கி வைத்தனர். குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர்.
ஆயிரக்கணக்கான காளையின் உரிமையாளர்களும், காளையர்களும் இப்போட்டிக்கு விண்ணப்பித்த நிலையில், 1000 காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் இப்போது களத்தில் உள்ளனர். முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.