Avaniyapuram jallikattu Live: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க திணறும் வீரர்கள்..! நேரலை..
🎬 Watch Now: Feature Video
Published : Jan 15, 2024, 7:26 AM IST
|Updated : Jan 15, 2024, 3:22 PM IST
மதுரை: 'தை' முதல் நாள் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பொங்கலுக்கே பெயர் போன மதுரை 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு' மைதானம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்ட 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்களுடன் கோலாகலமாக இன்று (ஜன்.15) துவங்கியது.
8 சுற்றுகளாக நடக்கும் ஜல்லிக்கட்டு: இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.
முதல் பரிசு 'கார்': இன்று அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, தேர்வாகும் நபர்கள் மற்றும் காளைகளே களமிறங்கி விளையாட அனுமதிக்கப்படுவர். முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கும், மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கும் கார்கடள பரிசாக வழங்கப்பட உள்ளன.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்: காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இதற்காக வாடிவாசல் அருகே இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல்துறை சார்பாக 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காளைகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும்: மாடுகளின் கொம்புகளைப் பிடிப்பதோ, அவற்றின் கால்களைப் பின்னுவதோ கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் உள்ளன. மேலும் காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை வீரர் இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடுபிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
THANK YOU: Video Courtesy to Su.Venkatesan Madurai MP Facebook Live