ஹைதராபாத்: கர்ப்பிணிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், ரத்த உறைவு கோளாறு வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் உடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட சிலர், இந்த அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், பிறப்புக் கட்டுப்பாடுளுக்காக ஈஸ்ட்ரோஜனை எடுத்துக்கொள்பவர்களுக்கும், ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவத்துள்ளனர்.
ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு
பிறப்பு கட்டுப்பாடுகளுக்காக மாத்திரைகள் உட்கொள்ளும் பெண்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவிட்-19 நோயால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால், ரத்தம் உறைவதற்கான ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கலாம்.
இந்த பெண்கள் ஆன்டிகோ ஆகுலேஷன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அல்லது அவர்களின் ஈஸ்ட்ரோஜன் மருந்துகளை நிறுத்த வேண்டும் என்று எண்டோகிரைனாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி குறிப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.