ETV Bharat / lifestyle

'வாழ நினைத்தால் வாழலாம்' - உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று - #Shawshank Redemption

மனப் பிறழ்வால் உருவாகும் தற்கொலை எனும் மோசமான செயலை தடுக்கும் நோக்கில் உலக தற்கொலைத் தடுப்பு தினமானது ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

Shawshank
author img

By

Published : Sep 10, 2019, 3:30 PM IST

உலக சுகாதார நிறுவனமும் உலக தற்கொலைத் தடுப்பு ஆணையமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினமாக கடைபிடிக்கிறது. மன ரீதியான சிக்கல் தீவிரமாக உள்ள இக்காலத்தில் தற்கொலை என்ற தவறான பாதையை பலரும் தேர்வு செய்யும் சூழல் நிலவி வருகிறது.

இளைஞர்களின் தற்கொலை முடிவுக்கான முக்கிய காரணங்கள்:

காதல் தோல்வி அல்லது நெருங்கிய நபரின் மரணமே தற்கொலை எண்ணத்திற்கு முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது. அதற்கடுத்தபடியாகப் பொருளாதார நெருக்கடிகளே தற்கொலைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வேலையிழப்பு, கடன் தொல்லை, சமூக அந்தஸ்து எதிர்காலம் குறித்த அச்சம் இவை அனைத்துமே பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களால் உருவாகும் காரணமாக உள்ளது.

சில நேரங்களில் அவமானம், நெருக்கடிகளுக்குப் பயந்து சிலர் தற்கொலை முடிவுகளை எடுப்பதும் காணப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள்:

  • அதிக அளவில் தற்கொலை நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
  • இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் சுமார் 17 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
  • உலகளவில் பெண் தற்கொலை அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

மன அழுத்தமே ஒருவரின் தற்கொலை முடிவுக்குத் தூண்டுகோலாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது. ஏளன பேச்சு, தீவிர உடல் நலக்கோளாறு, தொடர்ச்சியான சச்சரவுகள், போதைப் பழக்கம் போன்றவை மன அழுத்தத்திற்கான ஊற்றுக்கண்ணாக உள்ளது.

இருப்பிட சூழல், மருத்துவ ஆலோசனை ஆகியவை மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கான அடிப்படைத் தீர்வுகளாகும்.

மன அழுத்தச் சிக்கலிலிருந்து மீண்டு வந்த சாதனையாளர்கள்:

  • பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜே.கி ரவ்லிங்
  • பாலிவுட் திரை பிரபலமான ஷாருக் கான்
  • பாப் பாடகியான லேடி காகா
  • மேற்கத்திய நகைச்சுவை நடிகர் ஓவன் வில்சன்
    திரைப்படக் காட்சி
    திரைப்படக் காட்சி

லாஸ்ட் பன்ச்:

எந்த ஒரு கருத்தும் திரைப்படத்தின் மூலம் எளிதில் மனதுக்குள் நுழைந்துவிடும். அதன் காரணமாகவே ஹிட்லர் தனது கொள்கை பரப்பு ஊடகமாகத் திரைப்படத்தை ஜெர்மனியில் பயன்படுத்திக்கொண்டார். உலகில் வெளிவந்த தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஷாசாங்க் ரிடம்ப்ஷன் (Shawshank Redemption). படத்தின் காட்சி ஒன்றில் நாயகன் பேசும் வசனமே படத்தின் அடிநாதமாகும் 'நம்பிக்கை என்பது நல்ல விஷயம், ஒரு விதத்தில் நம்பிக்கை சிறப்பான விஷயமும் கூட, சிறந்த விஷயம் என்றும் வீழ்ந்ததில்லை' என்பான் நாயகன். வாழ நினைத்தால் வாழலாம், இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் இடமா இல்லை நமக்கு.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.