ETV Bharat / lifestyle

மீண்டும் ரியல்மியிடம் தோற்ற ரெட்மி

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல்மி 263 விழுக்காடு உயர்ந்துள்ளநிலையில், ரெட்மி வெறும் 9.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

Indian Smartphone Market
Indian Smartphone Market
author img

By

Published : Feb 9, 2020, 11:40 PM IST

சர்வதேச அளவில் இரண்டாவது மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக திகழும் இந்தியாவில், சீன நிறுவனங்களான ரெட்மி, விவோ, ஓப்போ, ரியல்மி ஆகிய நிறுவனங்களே தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு, ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கிடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய ஐடிசி (International Data Corporation) என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகபட்சமாக ரெட்மி நிறுவனம் 28.6 விழுக்காடுகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 43.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ரெட்மி விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஓர் ஆண்டில் அதிக மொபைல்களை விற்பனை செய்த ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற சாதனையையும் ரெட்மி படைத்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரெட்மி வெறும் 9.8 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு 3.2 விழுக்காடாக இருந்த ரியல்மி நிறுவனத்தின் சந்தை மதிப்பு, இந்தாண்டு 263 விழுக்காடு வளர்ச்சியடைந்து 10.6 விழுக்காடாக உள்ளது.

மீண்டும் ரியல்மியிடம் தோற்ற ரெட்மி!
ஐடிசி ரேங்கிங்

சாம்சங் (20.3), விவோ(15.6), ஓப்போ(10.7) ஆகிய நிறுவனங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரெட்மியின் புகழ்பெற்ற இந்த மொபைல் இனி வராது - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Intro:Body:

Xiaomi Growth Flat in Indian Smartphone Market, Realme Shipments Spiked in 2019: IDC

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.