ETV Bharat / lifestyle

ஒரு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 9! - ரெட்மி புதிய ஸ்மார்ட்போன்

அமேசான் தளத்தில் இன்று விற்பனைக்குவந்த ரெட்மி நோட் 9, ஒரு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

Redmi Note 9
Redmi Note 9
author img

By

Published : Jul 30, 2020, 3:40 PM IST

Updated : Jul 30, 2020, 3:50 PM IST

இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது இணை நிறுவனமான ரெட்மி மூலம் கடந்த மார்ச் மாதம் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது.

இந்த இரு மாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. அப்போதே ரெட்மியின் நோட் 9 ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியீடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ரெட்மி நோட் 9 இந்தியாவில் வெளியிடப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு அமேசான், எம்ஐ தளங்களில் விற்பனைக்குவந்த ரெட்மி நோட் 9 ஒரு சில நிமிடங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது.

இந்த ஸ்மார்ட்போனை எப்படியாவது வாங்க வேண்டும் என்று நினைத்த ரெட்மி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி, ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

  • 6.53 இன்ச் எல்இடி டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
  • 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 13 மெகாபிக்சல் கேமரா
  • பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
  • 5020mah பேட்டரி
  • ஆண்டிராய்டு 10 மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஐயுஐ 11 இயங்குதளம்
    ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

விலை

  • 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 11,999,
  • 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 13,499
  • 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 14,999

இதையும் படிங்க: 'பிளிப்கார்ட் உடனடி சேவை' அறிமுகம்... 90 நிமிடங்களில் வீட்டு வாசலில் உங்கள் ஆர்டர்!

Last Updated : Jul 30, 2020, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.