ஹைதராபாத்: வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த அந்நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்கள், புதுப்பிப்புகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் குரூப்-அட்மின்களுக்கு முக்கியமான புதிய வசதி வழங்கப்பட உள்ளதாக, அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்வீட்டில் "வாட்ஸ்அப் குழு அட்மினாக இருப்பவர், அந்தக் குழுக்களில் பகிரப்படும் எந்த செய்தியையும் நீக்க முடியும். இதற்கு யாருடை அனுமதியும் தேவையில்லை. இந்த வசதியால் குழுக்களில் தேவையில்லாமல் பகிரப்படும், அநாகரீக செய்திகள், ஆபாச செய்திகளை எளிதில் நீக்கிவிடலாம்.
நீக்கிய பிறகு, 'இது நீக்கப்பட்டது' என்று திரையில் தோன்றும். இந்த வசதி விரைவில் வழங்கப்படஉள்ளது" எனப் பதிவிடப்பட்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ்அப் குழுக்களில் மிகப் பழைய செய்திகள், வன்முறையை தூண்டும் வகையிலான செய்திகள், பாலியல் தொடர்பான செய்திகள் பகிரப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த புதிய வசதி மூலம், இதுபோன்ற செய்திகள் பரவலாமலும், யாரையும் புன்படுத்தாமலும் இருக்க செய்யமுடியும்.
இதையும் படிங்க: பெரியோர்களே, தாய்மார்களே! உங்களுக்கான வாட்ஸ்அப் அப்டேட்