ETV Bharat / lifestyle

கூகுளில் இப்படி ஒரு வசதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? - புகைப்படம் தேடு பொறி

கூகுள் ரிவர்ஸ் இமேஜிங் சேவை என்றால் என்ன, அதை வைத்து என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

கூகுள் இமேஜஸ்
author img

By

Published : Mar 17, 2019, 2:26 PM IST

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது பயன்பாட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி, இணையத்தில் தேடும் பணியை எளிமைப்படுத்திவருகிறது.

அதன் அடிப்படையில் கூகுள் அறிமுகப்படுத்தியதே 'கூகுள் ரிவர்ஸ் இமேஜிங்' (Google Reverse Imaging) சேவை.

சொற்களை பயன்படுத்தாமல் புகைப்படங்களை வைத்து ஒரு தகவலைத் தேட உதவும் இந்த முறையைக்கொண்டு, இணையத்தில் அந்த புகைப்படம் முதல் முதலில் எப்போது பதிவு செய்யப்பட்டது, எங்கு பதிவு செய்யப்பட்டது ஆகியதகவல்களை கண்டறிய முடியும்.

இந்த கூகுள் ரிவர்ஸ் இமேஜிங்கை எப்படி பயன்படுத்த வேண்டும்:

  1. கூகுள் இமேஜஸ் - https://images.google.com/ என்ற இந்த தளத்திற்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள தேடும் இடத்தில் (Search Bar) உள்ள புகைப்படம் போன்ற ஐக்கானைகிளிக் செய்ய வேண்டும்.
    google image search,google reverse image,google,image search,கூகுள்,கூகுள் ரிவர்ஸ் இமேஜ்,கூகுள் இமேஜ் சர்ச்,கூகுள்,புகைப்படம் தேடு பொறி,தேடு பொறி
    கூகுள் புகைப்படங்கள் தேடு பொறி
  2. அப்படி அந்த ஐக்கானை கிளிக் செய்தவுடன், நாம் தேடவிருக்கும் புகைப்படம் தொடர்பான யுஆர்எல் லிங்கை (Url link) வைத்து அந்த புகைப்படம் குறித்த தகவல்களை தேடிக்கொள்ளலாம்.
  3. அப்படி இல்லை என்றால், நீங்கள் தேட விரும்பும் புகைப்படம் உங்களிடம் இருந்தால் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் (Upload) செய்து, அதை வைத்து தேடுவதன் மூலம் அந்த புகைப்படம் தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ஒரு புகைப்படத்தை வைத்து தேடும்போது, அந்த புகைப்படம் எந்தெந்த தளங்களில் பதிவு-செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல் வழங்கப்படுவதால், அது எதனோடு தொடர்புடைய புகைப்படம் என்பது குறித்தும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் நாம் அறிந்துகொள்ளலாம்.

பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து, பயன்பாட்டை எளிமைப்படுத்திவரும் கூகுள் நிறுவனம் இந்த சேவையை தற்போது அந்த அளவுக்கு துல்லியமாக செயல்படுவதில்லை என்ற கருத்து ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.

Intro:Body:

Check 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.