ஒரு காலத்தில் இந்திய மொபைல் போன் சந்தையில் கொடிகட்டிப் பறந்தது தென் கொரிய நிறுவனம் சாம்சங். பின்னர் சீன மொபைல் போன் நிறிவனங்களின் வருகையால் இந்தியாவில் சாம்சங்கின் ஆதிக்கம் வெகுவாக குறைந்தது. தவறவிட்ட இந்திய மொபைல் போன் சந்தையை மீண்டும் பிடிக்க சாம்சங் தற்போது கடுமையாக முயன்று வருகிறது.
6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. தொடுதிரையைக் கொண்ட இந்த மொபைல் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்தபோன் 6 ஜிபி ரேம் 112 ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது. இதில் சேமிப்பு திறனை மேலும் 512 வரை அதிகரிக்க முடியும். மேலும் இது ஆண்ட்ராய்ட் 9 பையை மையமாக வைத்து சாம்சங்கால் உருவாக்கப்பட்ட சாம்சங் ஒன் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது.
32 மெகா பிக்சல் முதன்மைக் கேமரா, 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் (ஆழ்நிலை உணர்வி), 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா என்று மூன்று கேமராக்களை பின்புறமும் 16 மெகா பிக்சல் முன்புற பஞ்ச் நாட்ச் கேமராவையும் கொண்டுள்ளது. 3,500mah பேட்டரியைக் கொண்ட இது மிட்நைட் புளு, சீவாட்டர் புளு என இருவேறு நிறங்களில் விற்பனைச் செய்யப்படவுள்ளது.
மேலும் அறிமுக சலுகையாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் நிறுவனங்கள் ரீ-சார்ஜ் சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த மொபைல்போன் அமேசான், சாம்சங் இணையதளத்தின் மூலம் சரியாக பகல் 12 மணிக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.