Latest Tech news : சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி M30 என்ற புதிய மொபைலை வெளியிட்டிருந்தது. இந்தியச் சந்தையில், சாம்சங் நிறுவனம் இழந்த இடத்தை ஓரளவு கைப்பற்ற உதவியது இந்த M மற்றும் A சீரிஸ் மொபைல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிதாக மேம்படுத்தப்பட்ட கேலக்ஸி M30s என்ற புதிய மொபைலை சாம்சங் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது.
- 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
- 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் அல்டிரா வைட் (Ultra Wide) கேமரா + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (Dept sensor) கேமரா
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- எக்ஸினோஸ் 9611 பிராசஸர்
- 6,000mah பேட்டரி
- 15w ஃவாஸ்ட் சார்ஜ் வசதி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்புத் திறன்மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்புத்திறன்
- வெளியாகும் நிறங்கள் - கருப்பு, நீலம், வெள்ளை
ஆண்ட்ராய்டு 9 பை-ஐ மையமாக வைத்து சாம்சங் உருவாக்கியுள்ள Samsung One UI 1.5 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த மொபைல் ஃபோன் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி அமேசான் தளத்திலும், சாம்சங் தளத்திலும் விற்பனைக்கு வரவுள்ளது.