கேலக்ஸி ஏ20இ ரக திறன்பேசி பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ20இ திறன்பேசி, 5.8-இன்ச் தொடுதிரையுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் துல்லிய திரை, சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த திறன்பேசி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி ஏ20இ திறன்பேசி ரகமானது 16எம்பி + 5எம்பி இரட்டை பின்பக்க புகைபடக் கருவி, 16எம்பி முன்பக்க சுயமி(Selfie) புகைபடக் கருவியுடன் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இத்திறன்பேசி வெளிவரும் என்று நம்பப்படுகிறது. மேலும், 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 4000எம்ஏஎச் மின்கலன், கைரேகை உணர்கருவி, இணைப்பு ஆதரவு வசதிகளைக் கொண்டு இத்திறன்பேசி வெளிவரவிருக்கிறது.