ETV Bharat / lifestyle

கொரோனா எதிரொலி - ரெட்மி மொபைல் விலை ஏற்றம்! - கொரோனாவால் ரெட்மி மொபைல் விலை உயர்வு

கோவிட் -19 (கொரோனா) தொற்று காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ரெட்மி நோட் 8 விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Redmi note 8 price hiked due to Coronavirus

author img

By

Published : Feb 16, 2020, 8:00 PM IST

சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவின் பல முக்கிய பகுதிகள் முடங்கியுள்ளதால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேபோல, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில், பெரும்பாலானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதால், சீனாவின் இந்த பாதிப்பால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 8 மொபைலின் விலையை உயர்த்தியுள்ளது.

சீனாவில் மொபைல்போன் உற்பத்திகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், ரெட்மி நோட் 8 மொபைலின் விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 10,499க்கு விற்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த விலையேற்றம் தற்காலிகமானதுதான் என்றும் ரெட்மி நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸுக்கும் மத்திய பட்ஜெட்டுக்கும் இப்படி ஒரு தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.