ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி C3 ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 6.52 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் பிராசஸர் என்று அட்டகாச வசதிகளுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஹிட் அடித்தது. 3 ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம், ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டியை மத்திய அரசு 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்த்தியது. இதன் காரணமாக, இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போனின் விலை மேலும் 500 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டது. நல்ல வசதிகள் கொண்டிருந்ததால் இந்த விலை ஏற்றம் ஸ்மார்ட்போனின் விற்பனையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மேலும் 1000 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.6,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நார்சோ C3 சிறப்புகள்
- 6.52 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர்
- பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா
- 5000mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்
அதேபோல, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ரியல்மி நார்சோ 10A என்ற ஸ்மார்ட்போனின் விலையும் தற்போது ரூ.500 அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.8,499க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நார்சோ 10A சிறப்புகள்
- 6.52 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர்
- பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் வசதி
- முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா
- 5000mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்
இதையும் படிங்க: சோனியின் அடுத்த அறிமுகம்... கலக்கல் வசதியுடன் வெளிவரும் ஸ்மார்ட் டிவி!