கரோனா வைரஸ் அலை வீசினாலும், டெக் உலகம் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், நிச்சயம் புதிய சாதனங்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதை நன்கு அறிந்து, வாரம்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகளை வெளியிடுகின்றனர்.
அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் ஒன்பிளஸ் நார்ட் CE 5ஜி (Nord CE 5G) வரும் ஜுன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஜுன் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 5ஜி சிறப்பு அம்சங்கள்
- 6.43 இன்ச் அமோல்ட் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்
- 64எம்பி பிரைமரி சென்சார், 8 எம்.பி அல்ட்ரா வைட், 2 எம்.பி டெப்த் சென்சார் என மூன்று பின்புற கேமராக்கள்
- 16 எம்.பி செல்ஃபி கேமரா
- ஆக்ஸிஜன் ஓஎஸ் 11
- 6 ஜிபி, 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 4500mah பேட்டரி
- 30w பாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விற்பனை விலை ஒன்பிளஸ் நார்ட்-ஐ(சராசரியாக ரூ.25,000) விட 2 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் இணைந்து ஒன்பிளஸ் டிவி யு 1 எஸ் என்ற புதிய ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளது.