ஒரு காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமின்றி, உலக ஸ்மார்ட்போன் சந்தையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நோக்கியா நிறுவனம், சீன நிறுவனங்களின் வரவால் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாமல் திவாலானது.
அதன் பின் நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமை பின்லாந்தைச் சேர்ந்த ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கைப்பற்றியது. முன்னர் இருந்ததைப் போல ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியாவிட்டாலும், அவ்வப்போது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவந்தது நோக்கியா.
இந்நிலையில், நோக்கியா நிறுவனம் புதிதாக வால்வரின் (Wolverine) எனப்படும் நோக்கியா 2.4 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸரைக் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை எட்டாயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல ஸ்னாப்டிராகன் 670 பிராசஸருடன் நோக்கிய 6.3 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் நோக்கிய 7.3 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நோக்கியா 7.3 மாடல் 5ஜி வசதியை பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்... வாயைப் பிளக்க வைக்கும் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்!