இப்போது என்னதான் நாட்ச்-லெஸ் டிஸ்பிளே(notch-less display), இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் என ஏகப்பட்ட வசதிகளுடன் மொபல்கள் வந்தாலும், 90ஸ் கிட்ஸுகளுக்கு ஆல் டைம் பேவரைட் என்றால் அது நோக்கியாதான்.
இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் HMD குளோபல் நிறுவனம், Nokia 110 என்ற புதிய பீச்சர் போனை வெளியிட்டுள்ளது.
- 1.77 இன்ச் டிஸ்பிளே
- சீரிஸ் 30+ இயங்குதளம்
- இரட்டை சிம்
- ரேடியோ
- பின்புற கேமரா
- 800mah பேட்டரி
- கறுப்பு, பிங்க், நீலம் ஆகிய நிறங்களில் வெளியாகவுள்ளது
- 32 ஜிபி வரை மெமரி கார்ட் மூலம் சேமிப்புத்திறனை அதிகரிக்கலாம்
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் கேமான பாம்பு(snake) கேமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக நோக்கியா பீச்சர் போன் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் பேட்டரி திறன்தான். அதன்படி இந்த 800mah பேட்டரி சுமார் 18.5 மணி நேரம் தாங்கும் என்றும் நோக்கியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம், 4 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட இந்த Nokia 110 (2019), ரூ. 1599க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த மொபைல் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நோக்கியா இணையதளத்திலும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.
இதையும் படிங்க: உங்க ரெட்மி மொபைலுக்கு MIUI 11 அப்டேட் எப்போ?