ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்ற விளங்கிய நிறுவனம் தென் கொரியாவைச் சேர்ந்த நோக்கியா. இதன் அனைத்து மாடல்களும் ஹிட் அடித்தன. ஆனால் அதன்பின் சீன நிறுவனங்களின் வரவால் நோக்கியா நிறுவனம் அதன் சந்தையை இழந்து திவால் ஆனது. அதைத்தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தை வாங்கிய ஹெச்.எம்.டி. குளோபல் (HMD Global) தான் இழந்த சந்தையை மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கின.
அதன்படி நோக்கியா நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான Nokia 9.3 PureView என்ற மொபைலை வெளியிடவுள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டு வெளியான Nokia 9 PureView மாடல் மொத்தம் ஏழு கேமராக்களைக் கொண்டிருந்தது. இதனால் Nokia 9.3 PureView மாடலுக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் Nokia 9.3 PureView மாடல் குறித்து சில தகவல்களைப் பிரபல ஸ்மார்ட்போன் செய்தி இணையதளமான GSMArena பகிர்ந்துள்ளது.
அதன்படி Nokia 9.3 PureView ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலும் ஒ.எல்.இ.டி. டிஸ்பிளேவையே இந்த மாடல் கொண்டிருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரையும் பாப்-அப் செல்ஃபி கேமராவையும் இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட்-19 தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு நோக்கியா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வெளியீடுகளைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 9 லட்சம் முகக்கவசங்களை வழங்கிய விவோ!