ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மிகவும் விலை உயர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரம் ஐபோன்களில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களும் ஒருவரின் தனியுரிமை பாதுகாக்க ஆப்பிள் காட்டும் முனைப்பும் வேறெந்த நிறுவனங்களுடனும் ஒப்பிட முடியாது.
தற்போது அனைத்து ஆப்பிள் ஐபோன்களிலும் ஆப் ஸ்டோரிலிருந்து (App store) மட்டுமே தேவையான செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற தளங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய ஆப்பிள் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், மற்ற தளங்களிலிருந்தும் அனைத்து வகையான செயலிகளை ஐபோன்களில் பதிவிறக்கம் செய்ய வழிவகுக்கும் புதிய மென்பொருளை தற்போது ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஹேக் iOS 11 மற்றும் அதற்குப் பின் வெளியான அனைத்து iOS இயங்குதளங்களிலும் வேலை செய்யும் என்றும் TechCrunch நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பிற்கும் தனியுரிமைக்கும் உட்சபட்ச முக்கியத்துவம் அளிப்பதால், இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகளை அந்நிறுவனம் மிக வேகமாகச் சரி செய்துவிடும்.
இருப்பினும் அதுவரை இந்த மென்பொருளை ஐபோன்களில் பயன்படுத்த வேண்டாம் என்றும் இதுபோன்ற மென்பொருளைப் பயன்படுத்தினால் ஐபோன்கள் மிக எளிதாக ஹேக் செய்யப்படும் ஆபாயம் உள்ளது என்றும் TechCrunch நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமேசானுக்கு அள்ளிக்கொடுக்கும் சேவை இதுதான்!