டெல்லி: கடந்த நவம்பர் மாதம் அதிவேக 4-ஜி பதிவிறக்க சேவை வழங்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI) வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதனைத்தொடர்ந்து வோடபோன் நிறுவனம் உள்ளது.
20.8 மெகாபைட் வேகம்
கடந்த மாதம் மட்டும் ஜியோவின் பதிவிறக்க 4ஜி இணைய சேவை வேகம் விநாடிக்கு 20.8 மெகாபைட்டாகவும், வோடபோனில் 9.5 மெகாபைட்டாகவும் இருந்துள்ளது. வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டபோதிலும், இரு நிறுவனங்களுக்கும் தனித்தனி தரவுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது.
அதேபோல், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும், வோடபோன் நிறுவனம் அதிவேக பதிவேற்ற இணைய சேவையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் மட்டும் பதிவேற்ற வேகம் விநாடிக்கு 6.5 மெகா பைட்டாக இருந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐடியா 5.8 மொகபைட், ஏர்டெல் 4 மெகாபைட், ஜியோ 3.7 மெகாபைட் சேவைகளை வழங்கியுள்ளன.
நாடு முழுவதும் மை ஸ்பீட் அப்ளிகேஷன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்படும் இணைய சேவைகளின் வேகங்கள் குறித்த தரவுகள் பெறப்படுகின்றன.
இதையும் படிங்க: பிளாட்டினம், ரெட்X திட்டங்களுக்கு தடை விதித்த ட்ராய்க்கு வோடஃபோன், ஏர்டெல் பதில்!