டெல்லி : சீன நிறுவனமான ஹூவாய், தனது மேட் 40 கைப்பேசித் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிசிறந்த லெய்கா நிறுவனத்துடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட படக்கருவிகள், 5nm சிறிய அளவிலான திறன்வாய்ந்த சிப்செட், வளைவான தொடுதிரை என அனைத்து சிறப்பம்சங்களுடனும் போட்டி விலையில் சந்தையில் தனது புதிய ஹூவாய் மேட் 40 தொகுப்பு கைப்பேசிகளை இந்நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது. இந்தக் கைபேசிகள் 75ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் இந்திய சந்தையில் மிளிர இருக்கிறது.
![ஹூவாய் மேட் 40](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9463659_mate.jpg)
ஹூவாய் மேட் 40 அம்சங்கள்
- இரட்டை சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 10ஐ அடிப்படையாகக் கொண்ட EMUI 11.0
- 6.5 அங்குலம் அளவிலான முழு அளவு எச்டி+ (1,080x2,376 பிக்சல்கள்) ஓஎல்இடி தொடுதிரை
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம் உடன் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்
- 5Nm கிரின் 9000 இ புராசஸர்
- 9 ஜிபி ரேம்
- மூன்று பின்பக்க படக்கருவி - 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் முதன்மை சென்சார் (எஃப் / 1.9 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமடா (f / 2.2 லென்ஸ்) +f / 2.4 டெலிஃபோட்டோ லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
- முன்பக்கத்தில், எஃப் / 2.4 வைட் ஆங்கிள் லென்ஸுடன் 13 மெகாபிக்சல் சென்சார்
- 128 ஜிபி / 256 ஜிபி சேமிப்புத் திறன்
- 5ஜி, 4ஜி எஃப்.டி.டி எல்.டி.இ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜி.பி.எஸ்/ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக், சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு வசதிகள்
- 4200mAh மின்கலத் திறனுடன் 40வாட் சக்திகொண்ட அதிவிரைவு மின்னூட்ட திறன்
- சைகை சென்சார், ஈர்ப்பு சென்சார், ஐஆர் சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், கைரோஸ்கோப், திசைகாட்டி, சுற்றுப்புற ஒளி சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், லேசர் சென்சார் ஆகிய உணரிகளைக் கொண்டுள்ளது
- 158.6x72.5x8.8 மிமீ அளவு
- 188 கிராம் எடை
- 9.2 மிமீ தடிமன்
ஹூவாய் மேட் 40 ப்ரோ அம்சங்கள்
![ஹூவாய் மேட் 40](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9463659_huawei-mate-40-plus.jpg)
ஹூவாய் மேட் 40 அம்சங்களுடன்
- 6.76 இன்ச் அளவிலான முழு அளவு எச்டி + (1,344x2,772 பிக்சல்கள்) ஓஎல்இடி
- மூன்று பின்பக்க படக்கருவி-50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் முதன்மை சென்சார் (எஃப் / 1.9 லென்ஸ்) உடன் எஃப் 1.8 லென்ஸ் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடனான 20 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது. மூன்றாம் நிலை 12 மெகாபிக்சல் எஃப் / 3.4 டெலிஃபோட்டோ லென்ஸாக உள்ளது.
- 256 ஜிபி சேமிப்பகம்
- 3.5 மிமீ ஹெட்ஜாக் இருக்காது.
- இது 66வாட் விரைவான மின்னூக்கும் திறனுடன், 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 4,400 எம்ஏஎச் மின்கல சேமிப்புத் திறன்
- 162.9x75.5x9.1 மிமீ அளவு
- 212 கிராம் எடை
- 9.5 மிமீ தடிமன்
ஹூவாய் மேட் 40 ப்ரோ பிளஸ் அம்சங்கள்
இதில் ஹூவாய் மேட் 40 ப்ரோ கைப்பேசியின் அம்சங்களை விட கூடுதலாக
- 12 ஜிபி ரேம்
- நான்கு பின்பக்க படக்கருவியில் கூடுதலாக 10 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், எஃப் / 4.4 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் சூப்பர்ஜூம் கொண்டுள்ளது
- 162.9x75.5x8.8 மிமீ அளவு
- 230 கிராம் எடை ஆகியவையும் உள்ளன.