டெல்லி: சாம்சங் நிறுவனம் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 62 (Samsung Galaxy F62) என்ற ஸ்மார்ட் கைப்பேசியை இந்தியச் சந்தையில் அறிமுகம்செய்துள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் அடிப்படை ரகமான 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.23,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.25,999 ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் லேசர் ப்ளூ, லேசர் கிரீன், லேசர் கிரே ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்
- 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ தொடுதிரை
- ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
- ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
- 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- டூயல் நானோ சிம்
- வைஃபை
- புளூடூத் v 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- என்.எஃப்.சி.
- யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 ஆடியோ ஜாக்
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 7,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி