ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்சின் மேம்படுத்தப்பட்ட மாடலான அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் புரோ ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்தச் சாதனம் 15 ராணுவ-தர சோதனைகளை நிறைவேற்றியுள்ளது. இதன் விலையாக ரூபாய் 12,999 நிர்ணயம்செய்துள்ளனர். இந்தச் சாதனம் வரும் மார்ச் 28ஆம் தேதியன்று, மதியம் 12 மணியளவில் அமேஸ்ஃபிட் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும், அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.
அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் புரோ சிறப்பு அம்சங்கள்
- ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஜிம்மிங், நடனம் போன்ற 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள் உள்ளன.
- கடிகாரத்தில் 1.3 இன்ச் அமோல்டு டிஸ்பிளே
- 390 mAh பேட்டரி
- ஒரே சார்ஜில் 18 நாள்கள் வரை பேட்டரி
- 1.5 மணி நேரத்தில் வாட்சில் முழு பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி
- வாட்டர் புரூப்
- புளூடூத் 5.0
- ஜிபிஎஸ் வசதி
- பயோ-டிராக்கிங் ஆப்டிகல் சென்சார், இதயத் துடிப்பு கண்காணிப்பு சென்சார்
இரண்டு நிறங்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அறிமுகமாகும் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகளவில் 100 கோடி பதிவிறக்கம் தாண்டிய பப்ஜி