ஹூவாய் நிறுவனம் புதிய முயற்சியாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின், அடுத்த கண்டுப்பிடிப்பான 'ஹூவாய் மேட் எக்ஸ் 2' ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய மேட் எக்ஸ் 2, மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், பிராசஸரை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்தாண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீன உற்பத்தியாளருக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை, வெளியீட்டை தாமதப்படுத்தியதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.
-
Huawei’s next folding phone is coming on February 22nd https://t.co/B3izexoX0k pic.twitter.com/wM5dGVjBjs
— The Verge (@verge) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Huawei’s next folding phone is coming on February 22nd https://t.co/B3izexoX0k pic.twitter.com/wM5dGVjBjs
— The Verge (@verge) February 3, 2021Huawei’s next folding phone is coming on February 22nd https://t.co/B3izexoX0k pic.twitter.com/wM5dGVjBjs
— The Verge (@verge) February 3, 2021
கிடைத்த தகவலின்படி, 8.1 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 16 மெகாபிக்சல் முன்புற கேமரா, 50 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள், 4400 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவை இடம்பெற்றிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்தாண்டு பிப்ரவரி 2019இல் அறிமுகமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான மேட் எக்ஸ், பயனாளர்களிடையே நல்ல வரவெற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அட்டகாசமான அம்சங்களுடன் சந்தையை அதிரவைக்கும் போக்கோ m3!