ETV Bharat / lifestyle

மின்னல் வெட்டும்போது செல்பி எடுக்கலாமா? - செல்பி

மழை பெய்யுது, இடி மின்னல் வேறு வெட்டுது. மொபைல் போனை அணைத்து வை என்று உங்களிடம் யாராவது கூறியது உண்டா? அப்படியானால், மின்னல் தாக்கினால் ஸ்மார்ட்போன் வழியாக மின்சாரம் பாயக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார் என்று அர்த்தம். இந்தக் கட்டுரை செல்போன் வழியாக தரையில் மின்னல் ஊடுருவும் சாத்தியத்தை ஆராய்கிறது.

Does Your Mobile Phone Attract Lightning

author img

By

Published : Jul 12, 2021, 1:17 PM IST

ஹைதராபாத் : ராஜஸ்தானில் மின்னல் பாய்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது. இந்தச் துயரச் சம்பவத்துக்கு பின்னால் செல்பி ஒன்று காரணமாக இருப்பதாக கூறுகின்றனர்.

ஆம். ஜோடி ஒன்று செல்போனில் செல்பி எடுக்கும்போது மின்னல் வெட்டியதாகவும் அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதாகவும் கூறப்படுகின்றன.

பற்றி எரிந்த ஸ்மார்ட்போன்

பொதுவாக ஆண்ட்ராய்டு செல்போன்கள் பாதுகாப்பானதா என்றால் சில இடங்களில் இல்லையென்றே நிரூபணம் ஆகியுள்ளது. சார்ஜரில் போட்ட ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியது, விமானத்தில் பயணிக்கையில் ஒரு நிறுவனத்தின் செல்போன் பற்றி எரிந்த சங்கதியெல்லாம் நாமறிந்ததே.

Does Your Mobile Phone Attract Lightning
ஸ்மார்ட்போன்

அந்த வகையில் தற்போது புதிய விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. சரி விஷயத்து வருவோம். மின்னல் வெட்டும்போது செல்பி எடுக்கலாமா? அதற்கு முன்னதாக இடி மின்னல் எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்.

  1. கடல் நீர் ஆவியாகி மழையாக பொழிகிறது. அதாவது சூடான ஈரக்காற்று மேலே எழும்பி செல்வதால் நீர்த்திவலைகள் உருவாக்கப்பட்டு மழை பொழிகின்றன.
  2. மேகத்தில் மிகப்பெரிய அளவில் மின்னூட்ட துகள்கள் தூண்டப்பட்டு மேகத்தில் வலிமையான மின் ஆற்றல் தேக்கப்படுகிறது. அதேபோல், நிலப்பரப்பின் மேல் மின்னூட்டம் உருவாகும்போது அது உயர் மின் அழுத்தமாக மாறுகிறது.
  3. மேகத்தின் கீழ் பகுதி, நிலத்தின் மேல் பகுதியிலுள்ள மின்னூட்ட துகள்கள் அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுக்களுடன் கீழ் பகுதியை அடைந்தவுடன் மின்னல் ஒளி தோன்றுகிறது.
  4. இந்த மின்சாரம் காரணமாக வளிமண்டலத்தில் காற்று சூடாகிறது. இதுவே நாம் கேட்கும் இடி முழக்கம்.

இந்த இடி மின்னல் ஸ்மார்போன்கள் வாயிலாக கடத்தப்படுகிறதா? என்றால் அறிவியல் ரீதியாக இல்லையென்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது. இந்தப் பகுத்தறிவு விளக்கங்களையெல்லாம் யாரோ ஒருவர் கொடுத்தாலும் கூட மக்கள் நம்புவதாக இல்லை. இதை இயற்பியல் விஞ்ஞானிகளும் பலமுறை கூறியுள்ளனர்.

லேண்ட்லைன் ஆபத்து

அவர்களின் கூற்றுப்படி, “நீங்கள் ஒரு லேண்ட்லைனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மின்னல் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் செல்போன் கோபுரங்களில் மின்னல் தாக்கும்போது, உயர் மின்னழுத்த மின்னோட்டம் தொலைபேசியில் வந்து அதைப் பயன்படுத்தும் நபரைத் தாக்கக்கூடும்.

ஆனால் மொபைல் போன்கள் வேறு, அவை வயர்லெஸ் சாதனங்கள். அவைகளின் செயல்பாடுகளும் வேறுபாடானவை.

நேரடி தொடர்பு இல்லை

பொதுவாக மொபைல் சாதனங்களுக்கு செல்லுலார் கோபுரத்துடன் நேரடி தொடர்பு இல்லை. செல்லுலார் கோபுரங்களிலிருந்து வரும் சிக்னல்கள் நம்மைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் உள்ளன. ஆக, வயர்லெஸ் சாதனத்தைப் பயன்படுத்துவது மின்னலால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்காது.

மின்னல்

மேலும் ஒருவர் மின்னலால் சிக்கிக்கொள்ளும் ஆபத்து அறிவியல் பரிசோதனையால் மதிப்பீடு செய்ய கடினமாக இருக்கும். இது, பல காரணிகளைப் பொறுத்தது. இருப்பினும், நீங்கள் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்து மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தினால் மின்னல் தாக்கக்கூடும்.

மின்னலை ஈர்க்கும்

ஆகவே மழை பெய்யும்போது லேண்ட்லைன் தொலைபேசியை பயன்படுத்தாதீர் என யாராவது கூறினால் இந்தக் கட்டுரையை எடுத்துக் காட்டுங்கள். எனினும் நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஏனெனில், செல்போன்கள் மின்னலை கடத்துவதற்கும் பயனரின் மூலம் மின்னழுத்தத்தை அனுப்புவதற்கும் ஒரு சாத்தியமான சாதனமாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. மேலும், ஒரு உயரமான பொருள் அதன் அருகே தாக்கப் போகும் மின்னலை ஈர்க்கும். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போதுவரை நடந்துவருகின்றன.

சுருங்கமாக கூறினால், உயரமான கட்டிடத்தின் மீது நீங்கள் நிற்கும்போது, மின்னல் வெட்டினால் ஸ்மார்ட்போனை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க : ராஜஸ்தானில் மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.