ஜிகாப்ஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம் கூறியது போல் ஆப்பிள் ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் மெயில் பாக்ஸ் செயலியில் எந்த விதமான வைரஸுக்கும் இடமில்லை என்றும், அவர்கள் கூறியதுபோல் நிறுவனம் அபாயகரமான எந்த உள்ளீடுகளையும் கண்டறியவில்லை எனவும் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சைபர் பாதுகாப்பை ஆராயும் நிறுவனமான ஜிகாப்ஸ் (ZecOps) இரண்டு ஆப்பிள் மின்னஞ்சல் பெட்டிகளிலுள்ள வைரஸுகளை கண்டறிந்துள்ளது.
ஆப்பிள் நிறுவன தகவல் சாதனங்களுடன் வரும் மின்னஞ்சல் பெட்டியில்தான் இந்த வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பதிப்புகளான iOS 13ஐ தாக்கவல்லது என எச்சரித்துள்ளனர்.
ஐபோன், ஐபேட் பயனர்களே உஷார்! மின்னஞ்சலைத் தொற்றிகொண்ட 2 வைரஸ்!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், இது போன்ற தகவல்களை அவசர அடிப்படையில் ஆராய்ந்து வருவதாகவும், வைரஸ் ஊடுருவலுக்கான முகாந்திரம் இருந்தால், அதற்கான பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய பதிப்பு அப்டேட் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.