மும்பை: அமெரிக்காவின் வீட்டு உபயோக மின்னணு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான கெல்வினேட்டர், தனது புதிய தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
கெல்வினேட்டர் உபகரணங்கள் நல்ல தரத்தைக் கொண்டு, நம்பகத்தன்மையை தங்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெற்றுள்ளது. அதனைக் கருத்திற்கொண்டு இந்திய குடும்பங்களின் சமீபத்திய விருப்பங்களைப் பூர்த்திசெய்ய தங்களின் புதிய தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தயாரிப்புகள் புதுமையான அம்சங்களைக் கொண்டு மலிவு விலையுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வீட்டு உபயோக மின்னணு உபகரணங்களின் சிறப்பம்சங்கள்
- கெல்வினேட்டர் நேரடி குளிரூட்டு தொழில்நுட்பம் - இந்தியாவின் முதல் நீர் குழாயுடன் கூடிய ஒற்றைக் கதவு குளிர்பதனப் பெட்டி
- அதிகபட்ச சேமிப்பு திறன் கொண்ட பிரீமியம் குளிர்பதனப் பெட்டிகள்
- 960 மணிநேர இடைவிடாத குளிரூட்டலுக்கு சோதிக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகள்
- தனித்துவமான துவைக்கும்போதே “ஆடையைச் சேர்” என்ற அம்சத்துடன் வரும் முன்கதவு சலவை இயந்திரங்கள்
- 5-நட்சத்திர சலவை இயந்திரங்கள் - ஆற்றல் மற்றும் நீர் நுகர்வு இரண்டையும் சேமிக்க நுகர்வோருக்கு உதவுகிறது
நுகர்வோரின் சேவைக்காக 365 நாட்கள் இயங்கும், 187 சேவை மையங்களுடன் 150+ இடங்களில் பரவியுள்ள கெல்வினேட்டரின் பரந்த சேவை வலையமைப்பை அணுகும் வசதி இந்த நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பது கூடுதல் வசதி.