ETV Bharat / lifestyle

வீடியோ கேம் கன்சோலை தயாரிக்கும் குவால்காம்

author img

By

Published : Mar 24, 2021, 8:39 PM IST

சான் பிரான்சிஸ்கோ: நிண்டெண்டோ சுவிட்சு கேமிங் கன்சோல் மாடலில், ஜாய்ஸ்டிக் வசதிகொண்ட கேமிங் கன்சோலை குவால்காம் நிறுவனம் தயாரித்துவருகிறது.

qualcomm
வீடியோ கேம்

நாம் நண்பர்களுடன் இணைந்து கபடி, கிரிக்கெட் என விளையாடிய காலம் மலையேறிவிட்டது. தற்போதைய, 2k கிட்ஸ் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதில்தான் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். மடிக்கணினி, கணினி, பிளே ஸ்டேஷன் எனப் பல்வேறு சாதனங்களில் கேம்ஸ் விளையாடினாலும், வெளியூர் செல்லும் சமயத்தில் கேம்ஸ் விளையாட முடியாதது குறையாகத்தான் இருந்துவந்தது.

அவர்களுக்காகவே, அறிமுகமானதுதான் வீடியோ கேம் கன்சோல். குறிப்பாக, இந்தச் சந்தையில் நிண்டெண்டோ சுவிட்ச் கேமிங் கன்சோல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அதிகளவிலான கேம்ஸ்களை விளையாட முடியும். பொதுமுடக்கம் சமயத்தில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களது நேரத்தை நிண்டெண்டோ சுவிட்ச் கன்சோலில் விளையாடுவதில்தான் செலவிட்டனர்.

குவால்காம்
வீடியோ கேம் கன்சோலை தயாரிக்கும் குவால்காம்

இந்நிலையில், நிண்டெண்டோ சுவிட்சுக்கு சரியான மாற்று சாதனத்தை குவால்காம் நிறுவனம் தயாரித்துவருகிறது. அதிலும், நிண்டெண்டோ போலவே ஜாய்ஸ்டீக் வசதி இடம்பெறவுள்ளது.

அந்தச் சாதனைத்தின் விலை 300 டாலர் (இந்திய மதிப்பில் 21 ஆயிரத்து 700 ரூபாய்) ஆக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குயிக் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 6000mah பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 தளத்தில் இயங்கக்கூடிய இந்தச் சாதனத்தை, தொலைக்காட்சியிலோ அல்லது மானிட்டரிலோ கனெக்ட் செய்துகொள்ளலாம். அதிக வசதிகளுடன் வெளிவரும் இந்தச் சாதனம், கேமிங் பிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 2020இல் அதிக விற்பனையான கேமிங் ஹாட்வேர் சாதனத்தில் நிண்டெண்டோ சுவிட்சும் உள்ளது. டிசம்பரில் அதிகளவிலான பயனாளர்களான விளையாடப்பட்ட முதல் 20 கேம்ஸ்களும், நிண்டெண்டோ சுவிட்சுதான் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கூகுள் மேப்பில் டார்க் மோட் வசதி அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.